உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாயால் வடை சுடுகிறார்... சீமானை கடுமையாக விமர்சித்த மார்க்சிஸ்ட்

வாயால் வடை சுடுகிறார்... சீமானை கடுமையாக விமர்சித்த மார்க்சிஸ்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; நுணலும் தம் வாயால் கெடும் என்பதை தமது பேட்டிகள் மூலம் சீமான் நிரூபித்துக் கொள்வதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி உள்ளதாவது; நுணலும் தம் வாயால் கெடும் என்று சொல்வார்கள். சீமான் அவருடைய வாயாலே கெடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது அவரின் ஏராளமான பேட்டிகள், மேடை பேச்சுகள் எல்லாம் உதாரணம்.பிரச்னைகளை பட்டியலிட்டு இதில் எல்லாம் கம்யூனிஸ்டுகள் என்ன செய்தார்கள் என்று அவர் கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கிறார். அவர் பட்டியலிட்ட எல்லா பிரச்னைகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கள போராட்டத்தில் நின்று பலவற்றில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதை என்னால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும்.இந்த போராட்டங்கள் நடைபெற்ற காலம் முழுவதும் சீமான் கருத்து கந்தசாமியாகவும், வாயால் வடை சுடுகிற வேலைகளை மட்டும் செய்து கொண்டாரே தவிர, அவர் கள போராட்டத்துக்கு என்றைக்குமே வந்தது இல்லை சம்பந்தப்பட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருக்கிற மக்கள் இதை அறிவார்கள்.அதனால் கம்யூனிஸ்டுகள் போராடுகிறார்களா என சீமான் போன்றவர்கள் சான்றிதழ் வழங்க வேண்டிய அவசியமில்லை. கம்யூனிஸ்டுகள் என்றாலே அவர்கள் போராட்டக்காரர்கள் என்று தான் நாடு முழுவதும் உள்ள மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.இவ்வாறு அவர் பேசி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

தமிழ் நிலன்
மார் 04, 2025 21:34

மறுபடியும் ஒட்டுண்ணி என்று நிரூபிக்க வேண்டுமா? சீமான் கேட்ட ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்ல திராணி இல்லை. ஒட்டுண்ணிக்கு பேச்சு வேற


தாமரை மலர்கிறது
மார் 04, 2025 20:04

கம்யூனிஸ்ட்கள் கட்சியை திமுகவிடம் அடகு வைத்து விட்டார்கள். சீமான் ரொம்ப ஒழுக்கசீலர் என்று யாரும் செர்டிபிகேட் கொடுக்கவில்லை. எடப்பாடி படுத்து தூங்கும்போது, அண்ணாமலை, சீமான் இருவர் மட்டுமே மக்களுக்காக குரல் கொடுக்கிறார்கள்.


vijai hindu
மார் 04, 2025 15:52

நீ உன் வாயால வடை சுட ஆரம்பி நெஞ்சை நிமித்தி கிட்டு வாயால வடை சுட்ட கதையை சொல்லு


கோமாளி
மார் 04, 2025 15:37

சமூகம் தித்திக்கும் அளவுக்கு பாயாசம் சாப்பிட்டிருக்கிறார்


Kasimani Baskaran
மார் 04, 2025 14:58

தீம்க்கா கை காட்டிய ஆளை கடித்து துப்புவது கம்மிகளின் வேலை. கிட்டத்தட்ட போஸ்டர் பாய்ஸ் போல ஆகிவிட்டார்கள்..


orange தமிழன்
மார் 04, 2025 13:56

அம்மா.... தாயே....இல்லை இல்லை.......அப்பா! தகப்பா! பார்த்து ங்கப்பா.........


Madras Madra
மார் 04, 2025 13:48

நோகாமல் கூலி வாங்க போராடும் கம்மிகள் உலகம் எங்கும் துரத்தப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் வளர்ச்சிக்கு எதிரிகள் இவர்களது சமீபத்தைய சாதனை 25 கோடி ரூபாய் போட்டி க்காக போராடியதுதான்


Narasimhan
மார் 04, 2025 13:48

உண்டியல் குலிக்கிட்டு போனா போண்டா பஜ்ஜிகூட சுட்டு தருவார்


Vel1954 Palani
மார் 04, 2025 13:44

ஏதோ மறுப்பு தெரிவிக்கணும் என்று மனசாட்சி இல்லாமல் சீமான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கு துப்பு இல்லாமல் சண்முகம் பச்சை பொய் பேசியுள்ளார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் .


ram
மார் 04, 2025 12:56

இதை சொல்லிக்கொண்டு இரண்டு கம்யூனிஸ்ட்களும் அறிவாலய வாசலில் துண்டு போட்டு உட்கார்ந்து கொண்டு..... வாங்குவார்கள். இதுவெல்லாம் ஒரு கட்சி, தனியாக நின்றால் நோட்டோவுக்கு கீழ்தான்.


சமீபத்திய செய்தி