உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து; ரூ.50 கோடி சேதம்

துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து; ரூ.50 கோடி சேதம்

துாத்துக்குடி: துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, 50 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. இதனால், மூன்று யூனிட்களிலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.துாத்துக்குடி துறைமுக சாலையில், தமிழக அரசுக்கு சொந்தமான அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஐந்து யூனிட்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், 1வது யூனிட் பாய்லரை குளிர்விக்கும் குளிர்சாதன பகுதிக்கு செல்லும் கேபிள் ஒயரில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது.சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். துாத்துக்குடி மட்டுமின்றி, மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட 20 வாகனங்கள் வாயிலாக நுாற்றுக்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 20 மணி நேர பெரும் போராட்டத்திற்கு பின், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.ஆனால், முதல் மூன்று யூனிட் பகுதிக்குள் அதிகளவு புகை மண்டலமாக காட்சியளித்தது. உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அனல்மின் நிலையத்தை சுற்றி பல மணி நேரம் புகை மண்டலமானது.தீ விபத்து காரணமாக, 1, 2, 3 ஆகிய யூனிட்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், 4 மற்றும் 5வது யூனிட்களில் மின்சாரம் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. முதல் இரு யூனிட்களிலும், 50 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை கலெக்டர் இளம்பகவத் பார்வையிட்டார். அதிகாரிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்திய பின் அவர் கூறியதாவது:யூனிட் 1 மற்றும் 2ல் உள்ள கேபிள்களில் ஏற்பட்ட தீ, மற்ற யூனிட்களுக்கு பரவுவது தடுக்கப்பட்டுள்ளது. கேபிள்களில் தீ அணைக்கப்பட்ட பிறகும் புகைமூட்டம் உள்ளது. அனல்மின் நிலைய இன்ஜினியர்கள் சில இடங்களை உடைத்து, புதிதாக வழி ஏற்படுத்திக் கொடுத்து, தீயின் தாக்கத்தை குறைக்க ஏற்பாடு செய்தனர்.தீ விபத்தால் எந்த ஆபத்தும் இல்லை; உயிர்பலி ஏதும் இல்லை. முதல் இரு யூனிட்களும் முழுமையாக மூடப்பட்டுள்ளன; 3வது யூனிட்டில் பாதுகாப்புக்காக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது; 4 மற்றும் 5வது யூனிட்களில் மின் உற்பத்தி தொடர்ந்து நடந்து வருகிறது. தீயணைப்பு பணியில் ஈடுபட்ட இரு வீரர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது நலமாக உள்ளனர். தற்போது தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. பாய்லர்களை குளிர்விக்கும் பகுதிக்கு செல்லும் கேபிள் ஒயர்கள் சரிசெய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

W W
மார் 18, 2025 08:49

கேபிள் ட்ருஞ்சில் எல்லா கேபிள்களிலும் Fire Retardants Coating, மிகவும் அவசியம் ஒய்யொரு யூனிட்டிக்கும் தனித்தனியாக கேபிள் த்ருஞ்சி அமைக்கப்பட்ட வேண்டும். கேபிள்களில் எலி, கரையான் கடிக்காத Anti டெர்மிட்ஸ் Poison Coating கொடுத்திருக்க வேண்டும். Fully Automatic Spiringler tem, Co2 Spraying System Computerized Smoke detector, Fire Alarm கண்ட்ரோல் ரூமிலிருந்து Zone wise கண்காணிக்க எதுவாக அமைக்கப்பட்ட வேண்டும்.நான் 41 வருடத்திற்கு முன்பு ஆப்பிரிக்காவில் வேலை பார்த்த பிளான்டில் அமைக்கப்பட்டிருந்தது அவர்கள் ப்ரொஜெக்ட்டின் 30% Fire & Safety க்கு வேண்டி சிலவு கண்டுஅஸ் ஸர்யாதில் ஆழ்ந்திருந்த மர்மம் பிடிபட்டது.இது என் தனி ஜக்ஜஷன் மட்டுமே .


அசோகன்
மார் 17, 2025 14:45

3 யூனிட் எறிந்ததா இல்லை 2 யூனிட் coal எறிந்ததா... கொள்ளையை கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக நடத்தப்பட்டது


M. PALANIAPPAN, KERALA
மார் 17, 2025 11:00

அனல் மின் நிலையம், மிகவும் ஜாக்கிரதையாக கவனிக்க வேண்டிய விஷயம். எதிர்காலத்தில் இதுபோல் ஒரு நெருக்கடி வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்


W W
மார் 17, 2025 09:50

Fire Alarm, Automatic Springier System இருக்குதா? இல்லையா? வெளியே சொன்னால் வெட்ககேடு இவை எல்லாம் இருந்தும் வேலை செய்யவில்லையா? இதனை அப்கரீட் செய்ய கொஞ்சம் சிலவு செய்யுங்கள் அப்படி எதுவும் இல்ல வெட்ககேடு Only fire extinguisher வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய இயலாது.இதில் அதிக கவனம் தியோவை.It is a National Waste .


अप्पावी
மார் 17, 2025 08:55

ஹையா... புது காண்டிராக்ட் விட்டு ஆட்டையப்.போட அதிகாரிகளுக்கும், மந்திரிகளுக்கும் புது வாய்ப்பு. ஜமாயிங்க.


raja
மார் 17, 2025 08:30

டாஸ்மாக் ஐ அடுத்து பத்துறுவா பாலாஜியை மின்சார அணிலாக மாற்றி கொண்டு நிலக்கரி ஊழலை வெளிச்சத்திற்கு எங்கே கொண்டு வந்து விடுவார்களோ என்று எண்ணி ஆதாரங்களை எல்லாம் கொளுத்தி விட்டு தீ விபத்து என்று நாடகம் ஆடுகிறார்களோ இந்த திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டம் என்று தமிழர்கள் நினைக்கிறார்கள்...


எவர்கிங்
மார் 17, 2025 08:11

மின் வெட்டை அமலாக்க விடியலாருக்கு நல்ல காரணம் கிடைச்சிடிச்சு


xyzabc
மார் 17, 2025 06:21

மத்திய அரசை வஞ்சித்து பணத்தை பிடுங்கும் இந்த மாடல் அரசு. வடை சாப்பிட்டு விட்டு கூச்சல் போட இன்னொரு வாய்ப்பு.


கோமாளி
மார் 17, 2025 05:03

திராவிடத்தின் வேலை


Kasimani Baskaran
மார் 17, 2025 04:19

விபத்தோடு ஏற்கனவே காணாமல் போன பல மில்லியன் டன் நிலக்கரி எரிந்து சாம்பலாகியிருக்க வேண்டுமே. திராவிட கோட்பாடுகளை நிர்வாகத்தில் புகுத்தி அப்படி ஒரு புரட்சி செய்தாலும் ஆச்சரியப்பட வேண்டாம்.


புதிய வீடியோ