உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகப்பேறு விடுப்பு சலுகை ரேஷன் ஊழியர் எதிர்பார்ப்பு

மகப்பேறு விடுப்பு சலுகை ரேஷன் ஊழியர் எதிர்பார்ப்பு

சென்னை:தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில், 24,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அதில், 40 சதவீதம் பேர் பெண்கள். இவர்கள், அரசு ஊழியர்களை போல, தங்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்குவதில் சலுகை அளிக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க பொதுச்செயலர் தினேஷ் குமார் கூறியதாவது:ரேஷன் கடைகளில் பணியில் சேரும் பெண்களுக்கு, ஓராண்டு தகுதிகாண் பருவமாக கணக்கிடப்படுகிறது. இந்த காலத்தில் தொகுப்பூதியமே வழங்கப்படுகிறது. மகப்பேறு விடுப்பு எடுத்தால், சம்பளம் இல்லாமல் விடுப்பு வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் தகுதிகாண் பருவத்தில் மகப்பேறு விடுப்பு எடுத்தால், அதை பணிக் காலமாக கருத அரசு உத்தரவிட்டுள்ளது. இதை, ரேஷன் ஊழியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும். இதனால், மகப்பேறு விடுப்பு காலத்தில் ஊதியம், பதவி உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். மேலும், ரேஷன் ஊழியர்களுக்கு சில சங்கங்களில் மகப்பேறு விடுப்பு ஓராண்டு தருவதில்லை. இந்த விடுப்பை அனைத்து சங்கங்களும் வழங்குவதை, அரசு உயரதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ