உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சி கொடிகளை அகற்றிய ம.தி.மு.க.,வினர்

கட்சி கொடிகளை அகற்றிய ம.தி.மு.க.,வினர்

ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து, வாகனங்களிலிருந்து கட்சிக் கொடிகளை ஆவேசத்துடன் அகற்றினர்.ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் மல்லை சத்யா. மாமல்லபுரம் அண்ணா நகர் பகுதியில் வசிக்கிறார். கடந்த 1996 - 2001ல், மாமல்லபுரம் பேரூராட்சித் தலைவராக பதவி வகித்தார். அவரது மனைவி துர்காசினி, தற்போது நகரமன்ற 14ம் வார்டு உறுப்பினராக உள்ளார்.ம.தி.மு.க., துவக்க காலம் முதல், அக்கட்சியில் மல்லை சத்யா உள்ளார். அவருக்கும், கட்சி பொதுச்செயலர் வைகோ மற்றும் முதன்மைச் செயலரும், வைகோவின் மகனுமான துரை ஆகியோருக்கும், சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பனிப்போர், தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.வைகோ, மல்லை சத்யாவை துரோகி என, கடுமையாக விமர்சித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, வைகோவை மல்லை சத்யா விமர்சித்துள்ளார். இந்நிலையில், மாமல்லபுரம் ம.தி.மு.க.,வினர், சத்யாவிற்கு ஆதரவாக, கட்சியிலிருந்து விலகுவதாக, நேற்று அறிவித்தனர். தங்களின் கார், ஆட்டோ ஆகியவற்றில் பறக்கவிட்டிருந்த, ம.தி.மு.க., கொடிகளை அகற்றியும், பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தும் பெரிய கொடிகளை வீசியெறிந்தும் எதிர்ப்பை காட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை