உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இயந்திரக் கோளாறால் ஸ்பைஸ்ஜெட் விமானம் தாமதம்

இயந்திரக் கோளாறால் ஸ்பைஸ்ஜெட் விமானம் தாமதம்

சென்னை: சென்னையில் இருந்து கர்நாடகாவின் ஷிவமோகாவுக்கு கிளம்பிய விமானத்தில் இயந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.சென்னையில் இருந்து கர்நாடகாவின் ஷிவமோகாவுக்கு 85 பயணிகள் உள்ளிட்ட 90 பேருடன் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு கிளம்பியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h86b6qd9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஓடுபாதையில் கிளம்பிய உடனேயே, விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதனையடுத்து, அந்த விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. கோளாறு சரி செய்யப்பட்டதைத் தொடர்ந்து விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக கிளம்பிச் சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை