மேலும் செய்திகள்
அழகிரி ஆதரவாளர் மன்னன் அதிமுகவில் ஐக்கியம்
2 hour(s) ago | 1
தமிழக இடைக்கால பட்ஜெட்: தலைவர்கள் சொல்வது என்ன?
4 hour(s) ago | 14
2026-27ல் தமிழக அரசின் கடன் ரூ.10.62 லட்சம் கோடியாக அதிகரிக்கும்!
5 hour(s) ago | 31
சென்னை : மருத்துவம் சார் பட்டப்படிப்புகளுக்கான முதல்கட்ட கவுன்சிலிங்கில், அரசு மருத்துவ கல்லூரிகளில், இப்படிப்புகளுக்கான அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. இரண்டாம்கட்ட கவுன்சிலிங், அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் நடக்கும் என தெரிகிறது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., பட்டப்படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், வரும் 28ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., - பி.பி.டி., உள்ளிட்ட மருத்துவம் சார் பட்டப்படிப்புகளுக்கான முதல்கட்ட கவுன்சிலிங் கடந்த 19ம் தேதி துவங்கியது. சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடந்துவரும் இக்கவுன்சிலிங், நாளையுடன் முடிகிறது. இதில், மருத்துவம் சார் பட்டப்படிப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் முழுவதும் நிரப்பப்பட்டுவிட்டன.
'மருத்துவம் சார் பட்டப்படிப்புகளுக்கு, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் மீதமுள்ள இடங்களுக்கு, இரண்டாம்கட்ட கவுன்சிலிங், அடுத்த மாதம் இரண்டாம் வாரம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்' என, கூடுதல் மருத்துவ கல்வி இயக்குனர் ஷீலா கூறினார்.
2 hour(s) ago | 1
4 hour(s) ago | 14
5 hour(s) ago | 31