உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டில்லி மன நல மருத்துவமனையில் மீரா மிதுன் அட்மிட்: போலீசார் தகவல்

டில்லி மன நல மருத்துவமனையில் மீரா மிதுன் அட்மிட்: போலீசார் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'டில்லியில் உள்ள மனநல மருத்துவமனையில், நடிகை மீரா மிதுன் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதால், அவரை ஆஜர்படுத்த முடியவில்லை' என, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன்,34, பட்டியலினத்தவர் குறித்து அவதுாறாக பேசி, சமூக வலைதளத்தில், 'வீடியோ' வெளியிட்டார். இதுகுறித்த புகாரில், 2021ம் ஆண்டில் மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மீரா மிதுன் தொடர்ந்து ஆஜராகவில்லை. இதையடுத்து, 2022ம் ஆண்டில் மீரா மிதுனுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளாக மீரா மிதுன் தலைமறைவாக இருந்தார். கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது, 'டில்லியில் சுற்றி திரிந்த மீரா மிதுன் மீட்கப்பட்டு, அங்குள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, டில்லி காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட மீரா மிதுனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் ஆஜராகி, ''டில்லியில் உள்ள மன நல மருத்துவமனையில், மீரா மிதுன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். உடல் நல பிரச்னையால், நீதிமன்ற உத்தரவை தனிப்படை போலீசார் நிறைவேற்றவில்லை. 'உடல் நலம் தேறி, பயணத்துக்கு தகுதியானவர் என, டில்லி டாக்டர்கள் சான்றளித்ததும், சென்னைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்,'' எனக்கூறி, விரிவான அறிக்கை தாக்கல் செய்தார். இதைப்பதிவு செய்த நீதிபதி, வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

KR india
ஆக 12, 2025 10:50

பொதுவெளியில், ஊடகங்கள் வாயிலாகவோ, சமூக வலைத்தளம் வாயிலாகவோ, பொது மேடையிலோ எந்த ஒரு சாதியை பற்றியும் இழிவாகவோ, அவமரியாதையாகவோ, வெறுப்புணர்வை தூண்டுவது போல் வெறுப்பு பேச்சு பேசுவதோ கூடாது இந்த நடிகை, குறிப்பிட்ட சமூகத்தை பற்றி இழிவாக பேசியது கண்டிக்கத்தக்கது. அதற்காக, இந்தப் பெண் ஏற்கனவே, சில வாரங்கள் சிறை தண்டனை அனுபவித்து விட்டார். இழிவாக பேசினார் என்ற குற்றத்திற்காக, மீண்டும், சிறை தண்டனை என்பது இயற்கை நீதிக்கு எதிரானது. அதே சமயத்தில், தீண்டாமை ஒழிப்பு சட்டம் "அனைத்து சாதிகளுக்கும்" விரிவு படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், அந்த சட்டத்தை முற்றிலும் நீக்கி விட்டு, அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம், கொண்டு வர வேண்டும். மத்திய அரசாங்கம் இதற்குண்டான நடவடிக்கையை, இப்போதே எடுப்பது அவசர, அவசியமாகும்.


naranam
ஆக 12, 2025 09:07

இனத்தவரை பற்றி ஏதோ ஒன்று கூறினார் என்பதற்காக அவரை வேட்டையாடும் அரசு, பிராமணர்களைப் பற்றி இழிவாகப் பேசுபவர்களை எதுவும் செய்வதில்லை..இதுதான் நம் நாட்டின் போலி சமூக நீதி..


sribalajitraders
ஆக 12, 2025 10:08

அப்படியென்றால் பிராமணர்களை மட்டும் பேசக்கூடாது மற்றவர்களை பேசலாமா


Ram
ஆக 12, 2025 06:50

நீதிமன்றம் இந்தமாதிரியான உபயோகமில்லாத கேசுகளில் நேரத்தை செலவிடுவதை நிறுத்திக்கொண்டு செந்தில் பாலாஜி போன்ற உண்மையான ஆபத்தான குற்றவாளிகளின் மேல் கவனம் செலுத்துமாறு மக்கள் விரும்புகின்ட்ட்றனர்


Raj
ஆக 12, 2025 05:25

இந்த பெண் ஒரு மனநோயாளி இதை கைது செய்து என்ன பண்ண.


Mani . V
ஆக 12, 2025 04:02

ஓ வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க இப்படி ஒரு வழி இருக்கிறதா?


sridhar
ஆக 12, 2025 06:23

அரசுக்கு வேண்டியவராக இருந்தால் மட்டுமே இந்த வழி. மற்றவர்களுக்கு கிடையாது. கஸ்தூரியை கைது செய்ய நூறு பேர் கொண்ட போலீஸ் படையை அமைத்தது அரசு.


சமீபத்திய செய்தி