ராமதாஸ் இல்லத்தில் அன்புமணி தாயாருடன் சந்திப்பு!
சென்னை; தைலாபுரம் அருகேயுள்ள ராமதாஸ் இல்லத்திற்கு வந்த அன்புமணி, தாயாரை சந்தித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gh70gn6o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் அக்கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையிலான மோதல், ஆறு மாதங்களை கடந்தும் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டு, 'நானே தலைவர்' என ராமதாஸ் அறிவித்தார். இப்போது அன்புமணியையும், அவரது ஆதரவாளர்களையும் நீக்கிவிட்டு, புதிய நிர்வாகக் குழுவை ராமதாஸ் அறிவித்துள்ளார். இச்சூழ்நிலையில், ராமதாஸ் மயிலாடுதுறை சென்றுள்ளார்.https://www.youtube.com/embed/C3-5SDV9mUoஇன்று இரவு தைலாபுரம் ராமதாஸ் இல்லத்துக்கு அன்புமணி திடீரென வந்தார். அங்கு அவரதுதாயாரை சந்தித்து பேசியதாக தெரிகிறது.