உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜி முதல்வருடன் சந்திப்பு

செந்தில் பாலாஜி முதல்வருடன் சந்திப்பு

சென்னை:டில்லியிலிருந்து திரும்பிய முதல்வரை, செந்தில் பாலாஜி சந்தித்து வாழ்த்து பெற்றார்.பிரதமரை சந்திக்க, டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், நேற்று இரவு 7:10 மணிக்கு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் முதல்வரை சந்தித்த செந்தில் பாலாஜி, அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அவரை அருகில் நிற்க வைத்து, கைகளை கோர்த்தபடி, முதல்வர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.பின், திருவள்ளூர் மாவட்டம், உளுந்தை கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு முதல்வர் சென்று விட்டார்.முன்னதாக, அமைச்சர் உதயநிதியை அவரது வீட்டில் செந்தில் பாலாஜி சந்தித்து வாழ்த்து பெற்றார். மற்ற அமைச்சர்களும் செந்தில் பாலாஜியை சந்தித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அஸ்வின்
செப் 28, 2024 16:06

எதுக்கு வாழ்த்து திருடவா மீண்டும் சாரய அமைச்சன் ஆக தொடர வா


Narasimhan
செப் 28, 2024 11:41

வில்லும் அம்பும் மீண்டும் இணைந்தன


RAMAKRISHNAN NATESAN
செப் 28, 2024 09:35

ரெண்டு பாத்திரமும் ரொம்ப நசுங்கி வளைஞ்சு நிறம் மங்கலாகி இருக்கே ..... இதுல ஒண்ணு ரிப்பேருக்கு அமெரிக்கா வந்துமா இந்த நிலை ????


Guruvayur Mukundan
செப் 28, 2024 08:42

ரெண்டு பேரு முகமும் சரியிலிலேயே.


VENKATASUBRAMANIAN
செப் 28, 2024 08:09

இன்னுமா மக்கள் இவர்களை நம்புகிறார்கள். இப்போது இவரே தியாகி என்பார். இந்த மாதிரி கேலிக்கூத்து எந்த மாநிலத்திலும் நடக்காது. தமிழகத்தில் மக்கள் தூங்கி கொண்டு இருக்கிறார்கள். வெளி மாநிலங்களில் நம் மதிப்பு தரம் தாழ்ந்து போயுள்ளது.


Mani . V
செப் 28, 2024 05:36

ஏன் பாஸ், பழைய பகையை மனதில் வைத்துத்தானே என்னை வெளியில் எடுக்க முயற்சி செய்யவில்லை?


புதிய வீடியோ