உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உறுப்பினர் சேர்க்கை: அடிக்கடி முடங்கும் த.வெ.க., சர்வர்

உறுப்பினர் சேர்க்கை: அடிக்கடி முடங்கும் த.வெ.க., சர்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: த.வெ.க., உறுப்பினர்கள் சேர்க்கைக்கு என, தனி செயலியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார். அப்போதே, லட்சக்கணக்கான ரசிகர்கள், இதில் இணைந்தனர். த.வெ.க.,வுக்கென விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தி முடித்த பின், உறுப்பினர்கள் சேர்க்கை இன்னும் வேகமெடுத்துள்ளது.செயலி வாயிலாக உறுப்பினர்களாக சேர பலர் ஆர்வம் காட்டுவதால், த.வெ.க., சர்வர் கடந்த சில நாட்களாக அடிக்கடி முடங்குவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'செயலி வாயிலாக இணைய ஒரே நேரத்தில் பலர் ஆர்வமாக இருப்பதால், இதற்கான சர்வர் அடிக்கடி முடங்குகிறது. 'எனவே, உறுப்பினர்களாக சேர இருப்பவர்களின் விபரங்களை சேகரித்து, சர்வர் இயல்பு நிலைக்கு திரும்பியதும், அதில் பதிவேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

BHARATH
நவ 11, 2024 16:43

இவன் ஒரு ஏமாத்துக்காரன் இந்த நாய்கள் ஆதார் எங்களை எங்கேந்து காசு கொடுத்து வாங்கி இருப்பானுங்கன்னு ஊருக்கே தெரியும்.


V GOPALAN
நவ 11, 2024 13:00

எல்லா சர்ச் கூடாரத்தில் உள்ளவர்கள் அனைவரும் உறுப்பினர் ஆகிவிட்டனர்


Rengaraj
நவ 11, 2024 12:50

அளவில் உறுப்பினர் எண்ணிக்கை தங்கள் கட்சி வைத்துள்ளது என்று பல்வேறு அரசியல் கட்சிகள் மக்களிடம் சொல்கின்றன. ஆனால் அதில் உள்ள உண்மைத்தன்மை குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. ஒரே நபர் தனக்கு ஆதாயம் கிடைப்பதாக இருந்தால் கட்சி மாறுவது வழக்கம். மேலும் தலைமையின் ஆணைக்கிணங்க உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடும் பல்வேறு மாவட்ட , வட்ட, மற்றும் கிளை நிர்வாகிகள் தங்களுக்கு அளிக்கப்பட்ட டார்கெட் பூர்த்தி செய்வதற்காக போலியாக ஆட்களை கணக்கில் காண்பிக்கலாம். தேர்தல் கமிஷன் மாவட்டம் அல்லது சட்டமன்ற தொகுதி வாரியாக பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஆராய்ந்தால் அந்த மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகையை விட கூடுதலாகவே இருக்கும். எனவே தேர்தல் கமிஷன் ஆதார் எண்ணை அடிப்படியாக கொண்டு உறுப்பினர் எண்ணிக்கையை சீரமைக்கவேண்டும் என்று உத்தரவு போடவேண்டும். ஒரே நபர் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் அந்த கட்சியிலோ அல்லது வேறு கட்சியிலோ இருந்தால் அதை தேர்தல் கமிஷன் நிராகரிக்க வேண்டும். நேர்மையான ஜனநாயகம் இருக்கவேண்டுமென்றால் உறுப்பினர் எண்ணிக்கையும் ஆதார் அடிப்படையில் இருக்க வேண்டும்.


திண்டுக்கல் சரவணன்
நவ 11, 2024 11:37

சர்வரை அமேசான் அல்லது அஸுர் அல்லது கூகுள் கிளௌடில் வைக்கச் சொல்லுங்கள்


Rajarajan
நவ 11, 2024 09:17

சரி, உறுப்பினர் ஆகிட்டா மட்டும் என்ன ஆகும் ? அப்போ உறுப்பினர் ஆனா, எதோ ஒன்னு உறுப்பினர் எதிர்பாக்கறாங்க. அப்பறம் எப்படி நேர்மையான ஆட்சி நடத்துவாங்க ? உறுப்பினர் அதிக எண்ணிக்கை காமிச்சா, கூட்டணி பேரம் நல்லா நடக்கும். அதுக்கு தான் இது உதவும். ஆக மொத்தம், எல்லா கட்சியின் மொத்த தமிழக வாக்காளரை சேர்த்தா, மொத்த எண்ணிக்கை பல கோடியை தாண்டும். நல்ல தமாசு.


Rpalnivelu
நவ 11, 2024 07:49

இது ஒரு போணியாகாத ஈர வெங்காய சுண்டெலிகள் நிறைந்த கட்சி. அஞ்சலையம்மாள் தான் இக் கட்சியை காப்போத்தனும். அது சரி, யார் இந்த அஞ்சம்மா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை