உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் நேற்று துவங்கியது. மொத்தமுள்ள, 1,660 இடங்களில், சிறப்பு பிரிவில் 12; அரசு கல்லுாரிகளில் 160 என, 317 இடங்கள் நிரம்பியுள்ளன. வரும் 27ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெற உள்ளது.-----___________கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் தணிந்துள்ளதால், மின் நுகர்வும் 16,000 மெகா வாட்டாக குறைந்துள்ளது. காற்றாலைகளில் இருந்து 4,500 மெகா வாட்டும்; சூரியசக்தி மின் நிலையங்களில் பகலில் 6,000 மெகா வாட்டும் மின்சாரம் கிடைக்கிறது. இந்த பசுமை மின்சாரத்தை முழுவதுமாக பயன்படுத்த, சேலம், மேட்டூர் அனல் மின் நிலையத்தில், 210 மெகா வாட் திறன் உடைய இரு அலகுகளிலும், 600 மெகா வாட் அலகிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ