உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாரத்தான் பங்கேற்பாளர்களுக்கு மெட்ரோ சலுகை அறிவிப்பு

மாரத்தான் பங்கேற்பாளர்களுக்கு மெட்ரோ சலுகை அறிவிப்பு

சென்னை: வரும் 6-ம் தேதி சென்னை மாரத்தான் போட்டியில் பங்கேற்பவர்கள் மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ சலுகை அறிவித்துள்ளது.சென்னை மெட்ரோ வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது: சென்னை மாரத்தானை முன்னிட்டு வரும் 6-ம் தேதி மெட்ரோ ரயில் அதிகாலை 3 மணி முதல் இயக்கப்படும்.மாரத்தான் போட்டியில் பங்கேற்பவர்கள் பயன்பெறும் வகையில் மெட்ரோவில் 3-5 மணி வரை கட்டணமில்லா சேவை அளிக்கப்படுகிறது. மாரத்தானில் பங்கேற்பாளர்கள் சிறப்பு க்யூ. ஆர்.குறியீடு பதியப்பட்ட பயண அட்டையை பயன்படுத்தி மெட்ரோவில் பயணிக்கலாம். வரும் 6ம் தேதி அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரையில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. என அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

போக்குவரத்து மாற்றம்:காவல்துறை

சென்னை ரன்னர்ஸ் கிளப் சார்பில் நான்கு பிரிவுகளாக பிரஷ் வொர்க்கர்ஸ் சென்னை மாரத்தான் போட்டி நடத்தப்படஉள்ளது. இதனையடுத்து, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போர் நினைவுசின்னத்திலிருந்து திருவிக பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. வாகனங்கள் கொடிமரச்சாலை வழியாக அண்ணாசாலை சென்று இலக்கை அடையாலாம். ஆர்கே சாலையில் இருந்து காந்திசிலை வரும் வாகனங்கள் விஎம் தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும்.பெசன்ட் நகர் 7-வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் எலியாட்ஸ் பீச் நோக்கி செல்ல அனுமதி இல்லை எம்.டி.சி பஸ்கள் மட்டும் பெசன்ட் நகருக்கு செல்ல அனுமதிக்கப்படும்பொதுமக்கள், வாகனஓட்டிகள் ஒத்துழைப்பு தருமாறு கொள்ளப்படுகிறார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ராஜா
ஜன 04, 2024 21:51

இந்த பணம் யார் அப்பன் கணக்கில் இருந்து எடுத்து மெட்ரோவுக்கு கொடுக்கப்படும்?


Bye Pass
ஜன 04, 2024 21:02

இலவசங்களை கொடுத்து கெடுக்காதீர்கள் ..


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ