உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேட்டுப்பாளையம் இரட்டை கொலை: குற்றவாளி வினோத்குமாருக்கு மரண தண்டனை விதிப்பு

மேட்டுப்பாளையம் இரட்டை கொலை: குற்றவாளி வினோத்குமாருக்கு மரண தண்டனை விதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவை மேட்டுப்பாளையம் அருகே, வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த தம்பியையும், அவரது மனைவியையும் கொலை செய்த வழக்கில், வினோத்குமார் என்பவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கோவை மாவட்டம் வெள்ளிபாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ், 22. இதே பகுதியை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த வர்ஷினி பிரியா, 17, என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கு கனகராஜ் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், 2019ம் ஆண்டு ஜூன் 28 தேதி, காதல் திருமண ஜோடியை, கனகராஜின் அண்ணன் வினோத் வெட்டிக் கொலை செய்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=njcrp6iy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வினோத், 25, அவரது நண்பர்கள் கந்தவேல், ஐயப்பன், சின்னராஜ் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு, கோவை எஸ்சி., எஸ்.டி., வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணை மேற்கொண்டது. குற்றம் சாட்டப்பட்ட வினோத்குமார் உள்ளிட்ட நான்கு பேரும் நீதிபதி விவேகானந்தன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அப்போது, வினோத்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவரை குற்றவாளி என்றும், மற்ற மூவரும் விடுதலை செய்யப்படுவதாகவும் நீதிபதி அறிவித்தார். இந்நிலையில், இன்று (ஜன.,29) வினோத் குமாருக்கு நீதிமன்றம் தண்டனை விபரங்களை அறிவித்தது. அதன்படி, வினோத்குமாருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

shakti
ஜன 29, 2025 20:56

இதென்ன நியாயம் ? வெடிகுண்டு வைத்து 60 பேரை கொன்றால் ஆயுள் தண்டனை. அதே வெறும் 2 பேரை கத்தியால் குத்தி கொன்றால் தூக்கு தண்டனையா ?


Ramesh Sargam
ஜன 29, 2025 20:18

மரண தண்டனை நிறைவேற்றும் பொது அதை டிவி சானல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யவேண்டும். அதை பார்த்தாவது பின்காலத்தில் அதுபோன்ற குற்றம் செய்ய எண்ணுபவர்கள் ஓரளவு திருந்த வாய்ப்புண்டு. அப்படி வழக்கத்தில் இல்லை என்று நீதிமன்றமும், அரசும், காவல்துறையும் கூறக்கூடும். புது வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.


Rameshmoorthy
ஜன 29, 2025 18:41

He should be hanged immediately, no mercy to be shown


Kumar Kumzi
ஜன 29, 2025 18:00

இது போன்ற கொலைகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க இவனை உடனே தூக்கிலிடுங்கள்


N.Purushothaman
ஜன 29, 2025 17:48

மரண தண்டனை கொடுக்க கூடாதுன்னு அர்பன் நக்சல்கள் குரல் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ...


அப்பாவி
ஜன 29, 2025 17:46

சீக்கிரம் தூக்கில் போடுங்க. இல்லேன்னா நீதியை தூக்கில் போட நிறைய ஆளுங்க இருக்காங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை