உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடப்பு ஆண்டில் 6வது முறை; நிரம்பியது மேட்டூர் அணை!

நடப்பு ஆண்டில் 6வது முறை; நிரம்பியது மேட்டூர் அணை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, நடப்பாண்டில் மே ட்டூர் அணை 6வது முறையாக நிரம்பி உள்ளது.மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணை நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yu3n8rkz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று காலை நடப்பாண்டில் மேட்டூர் அணை 6வது முறையாக நிரம்பி உள்ளது. அணைக்கு நீர்வரத்து 31,854 கனஅடியில் இருந்து 36,985 கன அடியாக அதிகரித்துள்ளது. 23 ஆயிரத்து 300 கன அடி நீர் டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.தற்போது அணையில் நீர்மட்டம் 120 அடியை எட்டியது. கரையார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Vasan
செப் 02, 2025 16:35

Water is upto brim but not at bottom of dam due to silt formation, which has not been desilted for several years. It is like tall coffee tumbler used in hotels, which hold coffee from middle to top only by fixing a plate at middle.


N Sasikumar Yadhav
செப் 02, 2025 11:37

எத்தனை முறை நிரம்பினாலும் கடைமடைக்கு நீர் பாய்ச்ச வழியிருக்காது


D Natarajan
செப் 02, 2025 08:35

எல்லா தண்ணீரும் கடலுக்கே . நீர் சேமிப்பு திட்டம் எங்கே. மழை நீர் சேமிப்பு திட்டம் என்ன ஆனது.


VENKATASUBRAMANIAN
செப் 02, 2025 08:14

என்ன பிரயோசனம். நம்மிடம் எந்த ஒரு தேக்கி வைக்க ஆணையே இல்லையே. கடலுக்கு விட்டு விட்டு அரசியல் செய்வார்கள். இதுதான் கடந்த ஐம்பது வருடங்களாக செய்கிறார்கள்.


Nada raja
செப் 02, 2025 07:54

கரையோர மக்கள் பாதிக்கப்படாத அளவில் எச்சரிக்கை விடுத்து அவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்ற அனைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்


புதிய வீடியோ