உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேட்டூர் அணை ஜூன் 12ல் திறப்பு; சட்டசபையில் துரைமுருகன் அறிவிப்பு

மேட்டூர் அணை ஜூன் 12ல் திறப்பு; சட்டசபையில் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: ''மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி பாசனத்திற்காக திறக்கப்படும்'' என்று அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.சட்டசபையின் இன்றைய கூட்டத்தொடரில், மேட்டூர் அணை திறப்பு மற்றும் தூர்வாரும் பணிகள் குறித்து, சட்டசபையில் துரைமுருகன் பேசியதாவது: நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஆறுகள் வாய்க்கால்கள் வடிகால்களில் மண் திட்டுகள் உள்ளது. தண்ணீர் தங்குயின்றி செல்ல, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 5,021 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாசன கால்வாய்களை தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு தூர்வாரும் திட்டத்தில் ரூ. 98 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மே மாதம் இறுதிக்குள் தூர்வாரும் பணிகள் முடிக்கப்படும். ஜூன் 12ம் தேதி பாசனத்திற்காக திறக்கப்படும். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sankaranarayanan
ஏப் 25, 2025 21:23

மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி பாசனத்திற்காக திறக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு இப்போது என்ன அவசரம் இது மக்களின் மனதின் திசையை திருப்புவதற்காக செய்யும் சூழ்ச்சி இந்த ஆளு மாற்றுத்திறனாளிகளை பேசின பேச்சு இப்போது சூடு பிடித்து என்ன செய்வதென்றே தெரியாமல் இங்குமங்குமாக அலைகிறார் உச்ச நீதிமன்றமும் இந்த ஆளு பேச்சை வன்மையாக கண்டிதுள்ளது இவரையும் அமைச்சரையில் இருந்து நீக்கும் வரை கட்சிக்கு ஆபத்துதான்