உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திராவிட இயக்கம் வலுவடைய காரணமே எம்.ஜி.ஆர். தான்; சைதை துரைசாமி

திராவிட இயக்கம் வலுவடைய காரணமே எம்.ஜி.ஆர். தான்; சைதை துரைசாமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகங்கை: தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் தான் திராவிட இயக்கம் வலுவடைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். சிவகங்கை தேவகோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கிராம நிர்வாக அலுவலர் தினவிழா, எம்.ஜி.ஆர். நூலக திறப்பு விழா, நூல் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமி எம்.ஜி.ஆர்., நூலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: அனைவரும் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய வாழ்வியலை சினிமா மூலம் எம்.ஜி.ஆர். வழிகாட்டியுள்ளார். எம்.ஜி.ஆர்., சுடப்பட்ட போது, ' என் சகோதாரர் மருத்துவமனையில் இருக்கிறார். அவருக்கு வாக்களியுங்கள். முதல் வெற்றி மாலையை நான் அணிவிக்கிறேன்,' என அண்ணாதுரை கூறினார். அதன்பின், மிகப்பெரிய வெற்றியை எம்.ஜி.ஆருக்கு மக்கள் கொடுத்தனர். ஜானகி அம்மாள், ஜெயலலிதா, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., ஆகியோர் முதல்வராகி இருக்கிறார்கள் என்றால், அதற்கு எம்.ஜி.ஆர். தான் காரணம். வேறு யாராலும் இதை செய்திருக்க முடியாது. அவரால் தான் திராவிட இயக்கமே வலுவடைந்தது. அடுத்த தலைமுறையினருக்கும் எம்.ஜி.ஆரைப் பற்றி சொல்லி கொடுக்க வேண்டும். உயர்கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தினார். அதனால், தான் இன்று மிகப்பெரிய அளவில் உயர்கல்வித்துறை வளர்ச்சியடைந்துள்ளது. எம்.ஜி.ஆருக்கு புகழை சேர்க்கவே இந்த நூலகம் திறக்கப்பட்டுள்ளது, எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Oru Indiyan
நவ 15, 2024 17:45

உயர்கல்வித்துறையில் புரட்சியா? யாரு எம் ஜி ஆரா? கூட எடுபிடியாக நடித்தவர், ஸ்டன்ட் மாஸ்டர், அல்லக்கை, சாராய அதிபர்களிடம் அரசு நிலங்களை இலவசமாக கொடுத்து, உயர்கல்வித்துறையை தனியார்மயமாக்கி குட்டிச்சுவரானதே எம் ஜி ஆரால் தான்.


அப்பாவி
நவ 15, 2024 17:30

கூத்தாடிகளை நம்பிய ஜெனரேஷன்கள்தான் காரணம்.


Perumal Pillai
நவ 15, 2024 16:20

இருந்தும் கெடுத்தான் .செத்தும் கெடுத்தான் .


Rengaraj
நவ 15, 2024 16:14

அண்ணாதுரைக்காகவே எம்ஜிஆர் திமுகவுக்கு வேலைபார்த்தார். கட்சி வெற்றிக்காக வோட்டுக்கேட்டார். அவர் மறைவுக்கு பிறகுதான் திமுகவில் பிரச்சினையே ஆரம்பித்தது. முதல்வர் என்ற பதவி அனைத்து விதத்திலும் தங்களுக்கு ஆதாயம் தரும் என்பதை நம்பி அதை நோக்கி பயணித்த ஒரு கூட்டத்தால் கட்சியின் கீழ்மட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் புறக்கணிக்கப்பட்டார். வெளியேற்றப்பட்டார். அதன் விளைவை கடந்த ஐம்பத்து இரண்டு வருடங்களாக தமிழகம் பார்த்துவருகிறது. அன்று வெளியேறியவரை உதாரணபுருஷராக கொண்டு ஆட்சிபீடத்தில் அதிகாரம்புரிந்தவர்கள் அவரை போன்று குணாதியசங்களுடன் மக்கள்மனதில் வலம் வரவில்லை. அதையும் கடந்த எட்டுவருடங்களாக தமிழகம் பார்த்துவருகிறது. இனிமேல் எம்ஜிஆர் என்பவரை முன்னிறுத்தி வோட்டுக்கேட்க அவர்களுக்கு எள்ளளவும் தகுதியில்லை. அதையும் மீறி அந்த கட்சிக்கு வாக்கு கிடைக்குமானால் அது மக்கள் எம்ஜிஆரை மறக்கவில்லை அவருக்காக போட்ட வோட்டு என்று அர்த்தமாகாது. எம்ஜிஆர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்றோ அல்லது அவர்போன்று ஆட்சியை தருவோம் என்று மக்களை முட்டாளாக்கி ஏமாற்றி வாக்களிக்கவைக்கப்பட்டதாகும். அவர் ஆட்சி நடக்கப்போகிறது என்று மக்கள் முட்டாள்தனமாக தாங்களே ஏமாந்து வாக்களித்ததாகும்.


Nallavan
நவ 15, 2024 15:25

திராவிடம் என்றல் தட்டில் காசுபோடு என்பதற்கு எதிர்பதம், திராவிடம் என்றாலே சிலருக்கு உடம்பெல்லாம் ஏறித்தான் செய்கிறது,


Kumar Kumzi
நவ 15, 2024 15:10

திராவிடம்னா என்னனு மொதல்ல வெளங்கப்படுத்துங்கய்யா அது என்ன புண்ணாக்குனு இதுவரைக்கும் எனக்கு புரியமாட்டுது


Haja Kuthubdeen
நவ 15, 2024 15:30

அது திராவிட கட்சிகளில் உள்ள 99%சதவீத தொண்டர்களுக்கே தெரியாதே என்னையும் சேர்த்து...


ஆரூர் ரங்
நவ 15, 2024 15:03

MGR மூகாம்பிகை ஆலயத்துக்கு சென்று வேண்டியது திராவிட பகுத்தறிவு வளர்ச்சிக்காகவா?


Haja Kuthubdeen
நவ 15, 2024 15:27

திமுக..அஇஅதிமுக போன்ற திராவிட கட்சிகளில் இருப்போர் பெரும்பாலும் தீவிர கடவுள் நம்பிக்கையும்..தின தினம் கோவில்களுக்கு போய் கடவுளை வணங்கும் உண்மையான ஹிந்துக்கள்தான்.கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் அதேதான்.புதிதாக தோன்றிய சமீபத்திய தேச பக்தர்கள்தான் தங்களால்தான் ஹிந்துமதமே இருப்பதுபோல் பில்டப் செய்வதே...


Subramanian Marappan
நவ 15, 2024 14:54

1967 மற்றும் 1971 தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றது எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் புகழால். இதை யாரும் மறுக்க முடியாது. எம்ஜிஆர் முகத்தை பார்க்க நீண்ட தூரம் பயணித்து மணிக்கணக்கில் காத்திருந்து அந்த சந்தோஷத்தில் இன்பம் கண்டவர்களில் நானும் ஒருவன். நல்லவனாக நேர்மையாளனாக ஒவ்வொருவரும் வாழ படங்கள் மூலம் அறிவுறுத்தியுள்ளனர் எம்ஜிஆர் ஒருவரே. எம்ஜிஆருக்கு பின் வந்த கதாநாயகர்கள் அழகற்று வில்லன் நடிப்பில் அனைத்து கெட்ட பழக்கங்களை திரையில் கொண்டு வந்தனர். திமுக தனித்து வெற்றி கண்டது 1989-91, 1996-2001, 2006-11 மற்றும் தற்போது அதிமுக பிரிவினை மற்றும் பல கட்சி கூட்டணி காரணம்.


Haja Kuthubdeen
நவ 15, 2024 14:31

இன்றும் புரட்சிதலைவர் பெயரை சொல்லாமல் தமிழக அரசியல் இல்லை...


Sampath Kumar
நவ 15, 2024 14:17

தப்பு அவரால் இல்லை அண்ணா காலம் தொடங்கோ கருணாநிதி யாழ் மட்டுமே உயர்த்தி பிடிக்கப்பட்ட திராவிட கொளகை அதுக்கான முயற்சி அதன் பின் பின்விளைவுகள் அபைதும் அனுபவித்து வைத்தவர் தான் கருணாதி உங்க ஆளி சிறைவாசம் அனுபவித்து உண்ட சினிமாவில் கோடா சிறையை விட்டு வேலி ஏறிவிடுவார் வரலாதரை திருத்த முயரிசிகரகீர்கள்


தியாகு
நவ 15, 2024 15:06

அடித்தட்டு மக்களிடம் திமுகவை சேர்த்த பெருமை எம்ஜியாருக்கு உண்டு.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 15, 2024 15:13

ஆரம்ப கட்டத்தில் திமுகவின் மூத்த தலைவர்கள் லிஸ்ட்டில் கருணாநிதி இல்லவே இல்லை ..... கட்டுமரத்தை முன்மொழிந்த எம் ஜி ஆர் ஆல் வந்த வாழ்வு ...... மற்றவர்களைக் கீழே தள்ளி தன்னை முன்னிறுத்தும் துர்க்குணம் கட்டுமரத்துக்கு உண்டு .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை