உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சருக்கு மைக் மேனியா: விஜயபாஸ்கர் கிண்டல்

அமைச்சருக்கு மைக் மேனியா: விஜயபாஸ்கர் கிண்டல்

அண்ணா பல்கலையில் இந்தியா முழுதும் இருந்து வந்து மாணவ - மாணவியர் பயிலுகின்றனர். இங்கு எப்போதுமே பாதுகாப்பு இருக்கும் என்பதாலேயே, தைரியமாக வந்து படிக்கின்றனர். ஆனால், தற்போது அந்த நம்பிக்கை போய்விட்டது.இதற்கு, தி.மு.க., தான் பொறுப்பேற்க வேண்டும். காரணம், குற்றம்சாட்டப்பட்ட நபர், தி.மு.க.,வில் பொறுப்பு வகிக்கிறார். தி.மு.க.,வைச் சேர்ந்த நபர் என்பதாலேயே, போலீசார் அவரை கடந்த 25ம் தேதியே பிடித்து, பின் விட்டுள்ளனர். பிரச்னை பெரிதாகிறது என்றதும் மீண்டும் அவரை பிடித்து வந்து கைது செய்ததாக காட்டியுள்ளனர்.இந்த விவகாரத்தில் துவக்கத்தில் இருந்தே, அரசு தரப்பில் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருகின்றனர். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், காவல் ஆணையர் அருண் ஆகிய மூவரும் மாற்றி மாற்றி பேசி வருகின்றனர். யாரை காப்பாற்ற இதெல்லாம் நடக்கிறது?சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எப்போதுமே தன்னை மறந்து பேசிக் கொண்டு இருக்கிறார். அதேபோல அவருக்கு 'மைக் மேனியா' வந்து விட்டது. மைக்கைக் எங்கு கண்டாலும், கருத்து மழை பொழிய துவங்கி விடுகிறார். சட்ட அமைச்சராக இருக்கிறார். ஆனால், அவர் பேசும் எந்தக் கருத்தும் சட்டத்துக்கு உட்பட்டதாக இல்லை.- விஜயபாஸ்கர்முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி