உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பால் உற்பத்தியாளர்களுக்கு ஆயிரம் கோடி கடன்; அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி

பால் உற்பத்தியாளர்களுக்கு ஆயிரம் கோடி கடன்; அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி

சிவகங்கை; தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்த ஆண்டில் ஆவின் நிர்வாகம் ரூ.1,000 கோடி வரை கடன் தந்துள்ளது என சிவகங்கையில் அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார். சிவகங்கையில், பால் வழங்குவோருக்கு நடந்த ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது: ஆவினுக்கு பால் வழங்கிய உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.2.70 போனஸ் தொகையாக தந்துள்ளோம். ஒட்டு மொத்தமாக பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.12.70போனஸ் தருகிறோம். ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை 48 சதவீதம் அதிகரித்துள்ளது. இதை 100 சதவீதமாக உயர்த்த முயற்சிக்கிறோம். கடந்த காலங்களில் ஆவினில் ஏற்பட்ட தொய்வை நீக்கி லாபத்தை நோக்கி செல்கிறது. ஆவின் மட்டுமே 36 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்கிறது. இந்த ஆண்டு 17 லட்சம் பேருக்கு கறவை மாடு கடன் வழங்கியுள்ளோம். விவசாயிகளுக்கு நியாயமான விலை வழங்குதல், தரமான பாலை மக்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்வதே ஆவினின் நோக்கம். கடந்த ஆட்சி காலங்களில் ரூ.5 கோடி வரை தான் ஆவின் மூலம் பால்மாடு கடன் தந்திருப்பார்கள். ஆனால் நாங்கள் கடந்த ஆண்டு மட்டுமே ரூ.1,000 கோடி கடன் தந்துள்ளோம். 70 லட்சம் லிட்டர் வரை கையாளும் விதத்தில் கட்டமைப்பை மேம்படுத்திவருகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை