உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பஸ் நிலையங்கள் உள்ளே செல்ல மினி பஸ்களுக்கு வருகிறது தடை!

பஸ் நிலையங்கள் உள்ளே செல்ல மினி பஸ்களுக்கு வருகிறது தடை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பஸ் நிலையங்கள் உள்ளே வந்து செல்ல, மினி பஸ்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில், 2950 தனியார் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மினி பஸ்களுக்கான தேவை அதிகரித்து வரும் வகையில், புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட உள்ளன. அதன்படி, 25 கி.மீ., வரை மினி பஸ்களை இயக்கலாம்.இதுதொடர்பாக, அரசு போக்குவரத்து கழகங்கள், பொதுமக்கள், மினி பஸ் உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடம், கடந்த ஜூலை 22ல் கருத்துக்கள் கேட்கப்பட்டு, அரசிடம் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், பஸ் நிலையங்களுக்கு உள்ளே, மினி பஸ்கள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாககூறப்படுகிறது.இதுகுறித்து, தமிழ்நாடு மினி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கொடியரசன் கூறியதாவது:டீசல் விலை, உதிரிபாகங்கள் விலை உயர்வால், பெரும் நஷ்டத்தில் மினி பஸ்களை இயக்கி வருகிறோம். அதனால், தமிழகத்தில் இருந்த மினி பஸ்கள் எண்ணிக்கை, 7500ல் இருந்து, 2940 ஆக குறைந்துள்ளது.தற்போது, மினி பஸ் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், அரசு நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்கதக்கது. ஆனால், பஸ் நிலையங்களின் உள்ளே செல்ல, மின்பஸ்களுக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளதை ஏற்க முடியாது.பஸ் நிலையங்களுக்கு வெளியே, சாலைகள் ஓரமாக மினி பஸ்களை நிறுத்தி இயக்கும் போது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பயணியர் வந்து செல்லவும் சிரமப்படுவர். சாலைகளை கடக்கும் போது, பயணியர் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

SP
நவ 29, 2024 16:43

போக்குவரத்து நெரிசலை குறைக்கவேண்டும் என்று உண்மையிலேயே அக்கறையிருந்தால் உடனே செய்யவேண்டும்


S Ramkumar
நவ 29, 2024 11:11

உழவர் சந்தை மாதிரி மினி பஸ் திட்டம் நல்ல திட்டம். இரண்டையும் அடுத்து வந்த அதிமுக ஆட்சி நாசமாக்கியது. பிறகு வந்த தி மு கா கண்டு கொள்ள வில்லை. இப்ப போக்குவரத்து துறை இருக்கும் நிலையில் தனியார் மினி பஸ் நல்ல திட்டம். நல்ல வரையறைகளுடன் செயல் படுத்தலாம். சில வழித்தடங்களில் வேன் மூலம் கூட போக்குவரத்து நடத்தலாம்.


SP
நவ 29, 2024 09:35

மினி பஸ்களால்தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காரணம் அவர்கள் நகருக்குள் வரும்பொழுது வேகமாக வருகிறார்கள். நகரிலிருந்து புறப்படும்பொழுது நடந்து செல்லும் வேகத்தில்தான் செல்கிறார்கள்.


தமிழ்வேள்
நவ 29, 2024 09:00

எந்த ஒரு தனியார் பஸ்ஸும் தங்களின் ஒதுக்கப்பட்ட நேரத்தில் பஸ் எடுத்ததாக வரலாறு இல்லை... இஷ்டத்திற்கு லேட் ஆக எடுத்து அடுத்தவனோடு தகராறு இழுத்து அப்புறம் ஓவர் ஸ்பீடு போய் ஆக்ஸிடென்ட் ஏற்படுத்த வேண்டியது... ஒழுங்கு என்பது இவர்களிடம் இல்லை... பிரச்சினைகளுக்கு காரணம் இவர்களே..


GMM
நவ 29, 2024 08:31

மினி பஸ் பேருந்து நிலையம் உள் செல்ல அனுமதிக்க வேண்டும். சாலையில் நிறுத்த இடம் இருக்காது. நீண்ட நேரம் நிறுத்த கூடாது. ஆவின் பாலகம், காவல், நீங்கலாக மற்ற கடைகள் அகற்ற வேண்டும். அனைத்து வாகனம் கடைசியாக நிறுத்தும் இடம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். விளம்பரம் முற்றிலும் நீக்க வேண்டும். நிலையம் சுற்றி தற்காலிக, நடைபாதை கடைகள் கூடாது.


கூமூட்டை
நவ 29, 2024 08:26

போக்குவரத்து மற்றும் மினி பஸ் தனியார் நடத்துவது மிகவும் கஷ்டமான விஷயம். அரசு சரியான முறையில் நடக்க வழி வகுக்க வேண்டும். வாழ்க வளமுடன் அகண்ட ஊழல்வாதி தக்காளி


சம்பா
நவ 29, 2024 06:52

பெரும்பாலும் நிறுத்த பட்டுவிட்டது இயங்குவது இல்ல


புதிய வீடியோ