உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை -தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்தில் பிரச்னை எதுவும் இல்லை; மத்திய அமைச்சர் விளக்கம்

மதுரை -தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்தில் பிரச்னை எதுவும் இல்லை; மத்திய அமைச்சர் விளக்கம்

சென்னை: மதுரை- தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.சென்னையில் கடந்த 10ம் தேதி (ஜன) பெரம்பூர் ஐ.சி.எப்., ரயில் பெட்டி தொழிற்சாலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களை சந்தித்தார். அப்போது, மதுரை-தூத்துக்குடி திட்டத்தை கைவிட தமிழக அரசு கோரியதாக கூறியிருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wzz6a2ox&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரின் பேட்டி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரயில்வே திட்டத்துக்கு தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்று விமர்சனங்களும் எழுந்தன. ஆனால், இந்த திட்டத்தை கைவிடுமாறு தமிழக அரசு ஒருபோதும் கூறவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கூறி இருந்தார்.எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழக அரசின் நிலையை கண்டித்து போராட்டமும் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், மதுரை தூத்துக்குடி ரயில்வே திட்டத்துக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து, தெற்கு ரயில்வே தரப்பில் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது; 2025ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்.பில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து ஒரே நேரத்தில் நிருபர்கள் பல கேள்விகள் கேட்டனர். பேட்டி நடந்த ரயில்வே பணிமனையில் ஒரே இரைச்சல் ஆகவும் இருந்தது.அப்போது மதுரை-தூத்துக்குடி ரயில் திட்டம் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அதிக இரைச்சல் எதிரொலியாக, அந்த திட்டம் தனுஷ்கோடி ரயில் திட்டம் தொடர்பான கேள்வியாக அமைச்சர் எண்ணினார். ஆகவே அதற்கான பதிலைத் தான் அமைச்சர் கூறினார். நிலம் ஒதுக்கீடு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னை காரணமாக தமிழக அரசு கைவிடலாம் என்று எழுத்துப்பூர்வமாக கேட்டுக் கொண்டதாக கூறியதாக தெரிவித்தார். அவர் அளித்த பதிலை கேள்வி கேட்ட நிருபர்கள், மதுரை-தூத்துக்குடி திட்டத்தை கைவிடுவதாக எடுத்துக் கொண்டனர். மதுரை- தூத்துக்குடி திட்டத்தில் தமிழக அரசால் எந்த பிரச்சனையும் இல்லை என்று மத்திய அமைச்சர் கூறி உள்ளார். தமிழக அரசு கைவிடும் படி கேட்டுக் கொண்டது தனுஷ்கோடி திட்டத்தை தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவல் தொடர்பு பிழை என்பது தொழிற்சாலையில் இயந்திரங்களின் இரைச்சல் காரணமாக நிகழ்ந்தது.இவ்வாறு தெற்கு ரயில்வே அளித்துள்ள விளக்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

முக்கிய திட்டம்

இத்திட்டம் தொடர்பாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மதுரை தூத்துக்குடிஅகல ரயில் பாதை திட்டத்திற்கு நிலம் எடுப்பதில் எந்த சிக்கலும் இல்லை. இத்திட்டம் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கியமான திட்டம். இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும். இவ்வாறு சிவசங்கர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

Gokul Krishnan
ஜன 17, 2025 13:55

அவரவது அந்த தவறை ஒப்பு கொண்டு விட்டார் இந்தியாவில் இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் என்று கூறிய திருட்டு மொழி ஆட்சிக்கு வந்த உடன் முதல் கை எழுத்து நீட் விலக்கு மற்றும் தி முக வினர் நடத்தும் மது பான ஆலைகள் உடனடியாக மூடப்படும் அனைத்து மகளிற்கும் மாதம் ஆயிரம் என்று கூறிய திருடர்கள் எங்கே


venugopal s
ஜன 16, 2025 10:55

இவர் தமது பெயரை அஸ்வினி வைஷ்ணவ் என்பதற்கு பதிலாக புளுகுணி வைஷ்ணவ் என்று மாற்றி வைத்துக் கொள்ளலாம், பொருத்தமாக இருக்கும்!


aaruthirumalai
ஜன 15, 2025 20:34

சொல்வதற்கு ஒன்றும் இல்ல


karthik
ஜன 15, 2025 20:13

யப்பா சாமிகளா ரொம்ப ஆடாதீங்க மக்களே....இந்த மந்திரி தேவை அற்ற அரசியல் பண்ணாம எந்த ப்ரிச்சனையும் இல்லைனு ரயில் திட்டம் அமலுக்கு வருதுன்னு சொல்லிட்டாரு தமிழ்நாடு அரசை சேர்ந்த இலாகா அமைச்சரும் அதை பற்றி விமர்சனம் செய்யவில்லை, எதோ நேர்லே இருந்து பார்த்த மாதிரி கேட்ட மாதிரி இப்படி குதிக்கணும் ? மக்களுக்கு நல்லது நடந்தா வலிக்குதா?


venugopal s
ஜன 15, 2025 20:13

இந்த கேவலமான பிழைப்பு பிழைப்பதை விட


Shivam
ஜன 15, 2025 19:21

தமிழ் நாடு பிஜேபி தலீவர் அடுத்து எப்படி கம்பி கட்டுவார்


Shivam
ஜன 15, 2025 17:55

பாம்பன் பாலத்தில் எவ்வளவு ஆட்டையப் போட்டீங்க , அது நிக்குமா, நிலைக்குமா?


Vijay D Ratnam
ஜன 15, 2025 17:42

கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் முதலில் ராமநாதசுவாமி கோவிலுக்குத்தான் வருவார்கள். அக்னிதீர்த்ததில் நீராடுதல், ராமேஸ்வரம் கடற்கரையில் திதி, தர்ப்பணம், முன்னோர்கள் வழிபாடு போன்றவருக்காக ராமேஸ்வரம் ரயில்நிலையத்தில்தான் இறங்குவார்கள். அதன் பிறகு அதில் பத்து சதவிகிதம் பேர் தனுஷ்கோடி சுற்றுலா சென்றால் பெரிய விஷயம். ராமேஸ்வரம் தனுஷ்கோடி ரயில் இணைப்பால் மதுரை ரயில்வே கோட்டத்துக்கு பெரிதாக வருமானம் வந்துவிடாது. அதற்கு பதில் வருமானம் அதிகம் வரும் இடங்களில் ரயில்பாதை அமைப்பது சிறப்பு. சிவகங்கை ரயில் நிலையத்தில் இருந்து வெறும் 30 கிமீ தூரம் கொண்ட சிலைமான் ரயில் நிலையத்தை இனைத்தால் மதுரையிலிருந்து காரைக்குடிக்கு நேரடி ரயில் வசதியும், மதுரை ஜங்க்ஷனிலிருந்து காரைக்குடி Jn, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி Jn, திருவாரூர் Jn, மயிலாடுதுறை Jn, சிதம்பரம், கடலூர் Jn வழியாக சென்னைக்கு இன்னொரு படுபிஸியான 365 நாட்களும் வருமானத்தை கொட்டும் ரயில்பாதை அமையும். இதன்மூலம் ரயில்வேக்கு வருமானம் அதிகரிக்கும். ஜவ்வு இழு இழுத்துக்கொண்டு இருக்கும் வேளாங்கண்ணி திருத்துறைப்பூண்டி Jn ரயில்பாதையை விரைந்து முடித்தால் சிறப்பாக இருக்கும்.


Shivam
ஜன 15, 2025 17:40

ஒன்றிய அமைச்சரே சொல்லிட்டார் மாநில அரசு நல்ல ஒத்துழைப்பு குடுக்குதுன்னு.


திகழ்ஓவியன்
ஜன 15, 2025 19:33

22 MP ஸ்டாலின் இடம் இருக்கு


Dharmavaan
ஜன 15, 2025 17:28

ஏன் இப்படி பேடித்தனமாக ஒன்று சொல்வதும் பின் பின்வாங்குவதும் பிஜேபிக்கு கேவலம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை