உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொதுவெளியில் புண்படுத்தி பேசிய அமைச்சர் துரைமுருகன்: மன்னிப்பு கோரும் மாற்றுத்திறனாளிகள் சங்கம்

பொதுவெளியில் புண்படுத்தி பேசிய அமைச்சர் துரைமுருகன்: மன்னிப்பு கோரும் மாற்றுத்திறனாளிகள் சங்கம்

சென்னை; பொதுவெளியில் புண்படுத்தி பேசிய அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஊனமுற்றவர்களை மதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 'ஊனமுற்றோர்' என்ற சொல்லையே தவிர்த்து 'மாற்றுத் திறனாளிகள்' என குறிப்பிட்டதோடு, அத்துறையின் பெயரையும் மாற்றுத் திறனாளிகள் துறை என மாற்றினார்.மேலும், அத்துறைக்கு அவரே பொறுப்பான அமைச்சராகவும் இருந்தார். அதேபோன்று, தற்போதும் தி.மு.க., ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பாளராக உள்ளார்.இந்நிலையில், தமிழகத்தில் மூத்த அரசியல்வாதியும் அமைச்சருமான துரைமுருகன் சிறிது கூட யோசிக்காமல் சட்டவிரோதமாக மாற்றுத் திறனாளிகளின் ஊனத்தை குறிப்பிட்டு அரசியல் நையாண்டி செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.மாற்றுத் திறனாளிகள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அவர்களின் ஊனத்தை குறிப்பிட்டு இழிவுபடுத்தி புண்படுத்திப் பேசியதற்கு அவர் பொதுவெளியில் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

மாறன்
ஏப் 08, 2025 13:00

சொன்னதுல என்ன தப்பை கண்டீர்


Ramesh Sargam
ஏப் 08, 2025 12:38

இந்த பொன்முடிக்கு இருக்கும் திமிர், தெனாவட்டு, கொழுப்பு அடக்கப்படவேண்டும். பொதுவாக வாக்களித்த மக்களை இந்த ஆள் மதிப்பதில்லை. பொதுமக்கள் என்றால் இவருக்கு கேவலம். அவர்கள் வோட்டு மட்டும்தான் இவருக்கு வேண்டும். மற்றபடி அவர்களுக்கு கொடுக்கவேண்டிய மரியாதையை இந்த ஆள் கொடுத்து நான் பார்த்ததில்லை. இவர் கொட்டம் அடக்கப்படவேண்டும்.


sankaranarayanan
ஏப் 08, 2025 11:50

மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது உடனே தாமதிக்காமல் பதவி விலக வேண்டும் இல்லையே பதவியிலிருந்து விலக்கப்பட வேண்டும்


nb
ஏப் 08, 2025 09:12

மன்னிப்பு கேட்டகலைனாலும் ஓட்டு போடதான் போறாங்க. எதுக்கு மன்னிப்பு?


S.V.Srinivasan
ஏப் 08, 2025 07:46

மாற்று திறனாளிகள் .... மன்னிப்பு கேட்க வேண்டும். வாய் கொழுப்பு அதிகம்


pv, முத்தூர்
ஏப் 08, 2025 07:11

இந்த அமைச்சர்க்கு வாய்கொஞ்சம் நீளம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை