உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் மகன் கல்லூரியில் ரூ.13 கோடி கரன்சி

அமைச்சர் மகன் கல்லூரியில் ரூ.13 கோடி கரன்சி

அமைச்சர் துரைமுருகனின் மகனும், தி.மு.க., - எம்.பி.,யுமான கதிர் ஆனந்த் நடத்தும் கல்லுாரியில் இருந்து, 13.07 கோடி ரூபாயும், அவரது வீட்டில் இருந்து, 75 லட்சம் ரூபாயும், அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.தி.மு.க., பொதுச்செயலராகவும், அமைச்சராகவும் இருப்பவர் துரைமுருகன். இவரது மகன் கதிர் ஆனந்த்; வேலுார் தொகுதி தி.மு.க., - எம்.பி.,யாக இருக்கிறார்.

சொத்து குவிப்பு

அந்த தொகுதியில், 2019ல் கதிர் ஆனந்த் போட்டியிட்ட போது, தன் பெயரிலும், மனைவி சங்கீதா, மகள்கள் செந்தாமரை, இலக்கியா, மகன் இளவரசன் ஆகியோர் பெயரிலும், 88.80 கோடி ரூபாய்க்கு அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் இருப்பதாக, வேட்பு மனுவில் தெரிவித்திருந்தார். தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காக, துரைமுருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான கிடங்கில் பதுக்கி வைத்திருந்த, 11 கோடி ரூபாயை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.அதன் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகளும் சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து வழக்கு பதிவுசெய்து, தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கதிர் ஆனந்த் எம்.பி.,யானதில் இருந்து, அவரின் மனைவி, மகள்கள் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகமாகி இருப்பதையும் கண்டறிந்தனர்.

சம்மன்

அதைத்தொடர்ந்து, காட்பாடி காந்தி நகரில் உள்ள கதிர் ஆனந்த் வீடு மற்றும் கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள அவருக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லுாரி ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், 44 மணி நேரம் சோதனை நடத்தினர்.இச்சோதனையில், கதிர் ஆனந்த் கல்லுாரியில் இருந்து, 13.07 கோடி ரொக்கம் மற்றும் வீட்டில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த இடத்தை உடைத்து, அங்கிருந்த, 75 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சொத்து ஆவணங்கள் மற்றும், 'டிஜிட்டல்' ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த பணம் குறித்து விளக்கம் அளிக்க சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி கதிர் ஆனந்திற்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டு உள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

Anantharaman Srinivasan
ஜன 22, 2025 23:16

அது ஏன் ரெய்டாகி பல மாதமான பின்னும் ஜெகத்ரட்ஜகன், ஏவ வேலு ஆகிய இருவர் மீதும் மேல் நடவடிக்கை எடுக்காமல் மத்தியரசு காலம் தாழ்த்துகிறது..?


Anantharaman Srinivasan
ஜன 22, 2025 23:08

கோமளி எடுபிடி கிட்டேயே இன்னும் முழுவதும் மாட்டலே. இவங்க பெரிய தலைவனை சோதனை போட்டால் Treasure Island டே கிடைக்கும்.


ananthu
ஜன 22, 2025 22:51

He is current sitting MP how he can run Education institution - how Govt authorities allowed this and what is source for this atleast 13 crores+ 75 lakhs MPs salary +perks are in Lakhs per annum


krishna
ஜன 22, 2025 17:02

ENNA SIR 13 KODI CURRENCY.IDHU ELLAM J7JUBI ENGA DRAVIDA MODEL KUMBALUKKU.IDHAI ELLAM SEIDHIYA POTTU ENGALAI ASINGA PADITHAADHING.1000 KODIGALIL MATTUME PESAVUM.IPPADIKKU THURU PIDITHU IRUMBU KARAM.


M Ramachandran
ஜன 22, 2025 16:45

நகைப்பாய் இருக்குது. பேச்சேல்லம் திமிரடியாய் வருமென இப்பொ? பேசம்மாள் எலேச்டின் எல்லாம் கனிவு காணாதீர்கள் அம்புட்டதசுருட்டு டா ஆண்டி என்று சுருட்டிக்கொண்டு உங்கள் தலிவர் பின்னாடி ஓங்கோலுக்கு ஓடி விடுங்கள். டப்பா பாலு சிங்கப்பூரு கன்னி மொழியெல்லாம் மூட்டை முடிச்சுடன் தயாராகி கப்பல் ஏற தயாராகி விட்டார்கள். மன்மோகன் கால மல்ல டில்லியில் அம்மையாரை கவனித்து தப்பித்து விட. இப்போது இருப்பது எமகாதகன்.


M Ramachandran
ஜன 22, 2025 16:39

இது ன் மோகன் சிங்க் ஆட்சி அல்ல மிரட்டி பணிய வைக்க. மு. கருணாநிதியின் ராஜ தந்திரம் ஸ்டாலினுக்கு சுத்தமாக இல்லை. போராதிற்கு குடும்ப பிணைப்பைய அளவுக்கு மீறி வெளிப்படையாகா காட்டுதல். சொன்ன / பேசியா சொல்லை காப்பாற்று வதில்லை. பொய் கூறுதல் பணிவு காட்ட வேண்டிய காட்ட வேண்டிய இடத்தில் பணிவு கட்டியும் வீராப்பு இந்தி எதிர்ப்பு, ஹிந்துக்கள் ஈர்ப்பு, திருட்டு தனமாகா மனைவியை கோயில் கோயிலாகா அனுப்பி பிரார்த்னைய்யகள் செய்தல் வெளியில் கோயில்களில் ஆட்டூழியம் செய்ய அமைச்சரை ஏவுதல் பிராமனானாய்ய்ய ஆசாபாசமாக பேசி அவர்கலிய்ய ஐந்து பூசைய்ய புனஸ்காரங்கள் செய்தல் சுத்த ஹம்பக் வெளி வேஷம். மக்கள் எப்படியிந்த அளையெல்லாம் நம்புவார்கள். அது தான் சந்தர்பம் நீங்கள் ஏ படுத்தி கொடுக்கிறீர்கள் கிடைய்யத்தும் மத்திய உளவு குறைய்ய வருமான துறை அவர்கள் வேலையை காட்டு கிறார்கள். வெவஸ்தையில்லாமல் பல லட்சம் கோடியை வீணாக்கி அதில் மீன் பிடிக்கிறீர்கள். மக்கள் வயிற்றெருச்சல் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. இப்போது புலம்பி என்ன செய்வது. சீமான் சொல்கிறாரெ வருவதை எதிர் கொள்வேன் என்று அது போல் சொல்ல வேண்டியது தானே?


கத்தரிக்காய் வியாபாரி
ஜன 22, 2025 15:42

ஒருபக்கம் தமிழக அரசு கடன் சுமையில் தள்ளாடுகிறது என்று செய்தி, அதே பக்கத்தில் இந்த செய்தி. கொள்ளை கூட்டத்தின் தலைவன் வாக்கிங் போகிறான்.


Matt P
ஜன 22, 2025 13:29

திறமையான தோரை முருகன்.


surya krishna
ஜன 22, 2025 13:21

thirudarkal jakkarathai


R.PERUMALRAJA
ஜன 22, 2025 12:56

பிணவறையிலே மக்கள் பணத்தை கொள்ளை அடித்து மூட்டை மூட்டையாக கட்டி வைத்தவர்கள் கல்லூரிகளில் வைத்திருப்பதில் என்ன ஆச்சரியம் .


K V Ramadoss
ஜன 23, 2025 01:52

ஆமாம் பிணவறையில் கண்டுபிடித்த பணமும் அந்த கேசும் என்ன ஆச்சு?