உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகுமா; அமைச்சர் கே.என். நேரு பதில்

திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகுமா; அமைச்சர் கே.என். நேரு பதில்

சென்னை: திமுக கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் விலகாது என்று அமைச்சர் கே.என். நேரு கூறி உள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் பேசியதாவது; திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகும் என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர். யாரும் போகமாட்டார்கள். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தான் ஒவ்வொருவராக விலகி செல்கின்றனர். ஓபிஎஸ் வந்திருக்கிறார். அவர்களின் ஆசை இது. ஏதேனும் ஒன்று சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். எடப்பாடி எதற்காக பாஜவுடன் கூட்டணி வைத்து இருக்கிறார். பல்வேறு விவகாரங்களில் இருந்து தப்பிக்கத்தான், எடப்பாடி கூட்டணி வைத்துள்ளார். மக்களோடு மக்களாக முதல்வர் இன்று மருத்துவ முகாம்களை தொடங்கி வைக்கிறார். இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கே.என்.நேரு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை