உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு சென்னை, கோவையில் விடுதிகள் அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு

எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு சென்னை, கோவையில் விடுதிகள் அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு

சென்னை: ''சென்னை, கோவையில், 80 கோடி ரூபாயில், எஸ்.சி., - எஸ்.டி., முன்மாதிரி மாணவர் விடுதிகள் கட்டப்படும்,'' என, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்தார்.சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்ய, மாவட்ட கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, அரசு மானியத்துடன், 25 கோடி ரூபாயில், 'உறுதுணை' குறு மற்றும் நுண் கடன் திட்டம் செயல்படுத்தப்படும்.உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள வணிக வளாகங்களில், 15 கோடி ரூபாயில், 'தாட்கோ வணிக வளாக திட்டம்' செயல்படுத்தப்படும். பழங்குடியினர் உழவர் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, 14 கோடி ரூபாயில், 'ஐந்திணை' பசுமை பண்ணை திட்டம் செயல்படுத்தப்படும். பழங்குடியினருக்கு உயர்தர மருத்துவ சேவைகள், அவர்கள் வசிக்கும் இடத்திலேயே கிடைப்பதை உறுதி செய்ய, 10 கோடி ரூபாயில், தொல்குடி நலவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்படும்.ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்காக, சென்னை, கோவையில் 80 கோடி ரூபாயில், உடற்பயிற்சி கூடம், பார்வையாளர் அறை, பன்னோக்கு அரங்கம் போன்ற நவீன வசதிகளுடன், முன்மாதிரி விடுதிகள் கட்டப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ