உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமலாக்கத்துறை ரெய்டு, விசாரணை; அமைச்சர் நேருவின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி

அமலாக்கத்துறை ரெய்டு, விசாரணை; அமைச்சர் நேருவின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தமிழக அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அமைச்சர் கே.என். நேரு மகனும், எம்.பி.,யுமான அருண் நேரு, நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தொடர்புடைய 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள ரவிச்சந்திரன் வீட்டில் அவர்கள் நடத்திய சோதனை முடிந்துவிட்டது.சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், ரவிச்சந்திரனை அமலாக்கத்துறையினர் அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் நெஞ்சுவலி, ரத்த அழுத்தத்தில் மாறுபாடு காரணமாக ரவிச்சந்திரன் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.முன்னதாக, இன்று (ஏப்.11) அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

S.V.Srinivasan
ஏப் 16, 2025 09:17

அமலாக்க துறை ரைடுன்னா இவங்க உடனே மருத்துவமனைக்கு ஓடி போயிடறாங்கப்பா. அப்படி என்ன வியாதியோ ?


R.MURALIKRISHNAN
ஏப் 11, 2025 23:11

மலபார் போலீசை விட்டு ஒரு மஜாஸ் செய்து விடவும்..இவனுகளுக்கு இப்ப மட்டும்தான் நெஞ்சுவலி வரும்


Gopal
ஏப் 11, 2025 22:17

அட உடனே நெஞ்சு வலி எல்லாம் வந்துடும். திராவிட மாடல்...


visu
ஏப் 11, 2025 21:43

ஏற்கனவே பண்ண இருதய சிகிச்சை உண்மையானதுதானா என்று சோதிக்க வேண்டும் 2026 இல் ஆட்சி மாறியதும் பெரும் வேடிக்கை இருக்கு


Senthil Arun Kumar D
ஏப் 11, 2025 21:41

"சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்"...காவேரி மருத்துவமனை தானே? ஏன் E D இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை? அந்தோ பரிதாபம்.


Indhuindian
ஏப் 11, 2025 21:23

Why there is a delay of two days?


ராமகிருஷ்ணன்
ஏப் 11, 2025 21:06

பேண்ட் நனையவில்லை, வெறும் நெஞ்சுவலி, அப்புறம் என்ன அரஸ்ட் தான். அமித்ஷாஜி ஊழல் பட்டியல் வெளியிட்ட பின்பு எல்லா அமைச்சர்களும் ஆஸ்பத்திரிக்கு வருவார்கள். உங்களுக்கு துணையா இருக்கும்.


நிக்கோல்தாம்சன்
ஏப் 11, 2025 20:54

பத்துரூபாய் அணில்


Raghavan
ஏப் 11, 2025 18:51

இவ்வளவு நாளாக நெஞ்சு வலி இல்லாமலா இருந்தார். அமலாக்கத்துறை விஜாரனை என்றதுமே எல்லா வலிகளும் வந்துவிடும் . இது எல்லாம் வெட்டிவேலை. ஒருபயனும் மக்களுக்கு இல்லை. எல்லாம் தண்ட செலவு . மக்கள் வரிப்பணம் வீண். அப்படியே வழக்கு தொடுத்தாலும் அது முடிய ஒரு 30 வருடங்கள் ஆகும் .


kamal 00
ஏப் 11, 2025 18:33

எத்தனை அடைப்பு இருக்கு


சமீபத்திய செய்தி