மேலும் செய்திகள்
கிரேட்டர் பெங்களூரு மசோதா: ஆய்வு அறிக்கை தாக்கல்
06-Mar-2025
சென்னை:உள்ளாட்சி தேர்தல் நடத்த ஏன் தாமதம் ஏற்படுகிறது என, அமைச்சர் நேரு சட்டசபையில் விளக்கம் அளித்தார்.சட்டசபையில் நேற்று எம்.எல்.ஏ.,க்கள் சிலர் பேசுகையில், 'உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்' என வலியுறுத்தினர்.அதற்கு அமைச்சர் நேரு அளித்த பதில்:உள்ளாட்சியில் இருந்து சில பகுதிகள் நகராட்சிகளிலும், நகராட்சிகளில் இருந்து சில பகுதிகள் மாநகராட்சிகளிலும் வருகின்றன. இதை சிலர் வரவேற்றுள்ளனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, ஒரு குழு அமைக்கப்பட்டு, பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்டு ஆய்வு நடந்து வருகிறது. அதுபோல், அந்தந்த கலெக்டர்களிடமும் கருத்து கேட்க வேண்டும். இதனால் தான் உள்ளாட்சி தேர்தல் நடத்த தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
06-Mar-2025