உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் பெரியசாமி அட்மிட்

அமைச்சர் பெரியசாமி அட்மிட்

கோவை:தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி, உடல் நலக்குறைவால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் இவரது வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. அதன்பின், வழக்கமான துறை சார்ந்த பணிகளையும், கட்சி சார்ந்த தேர்தல் பணிகளிலும் முழுமையாக ஈடுபட்டு வந்தார். தற்போது உடல் நலக்குறைவு காரணமாக, கோவை சிங்காநல்லுாரில் உள்ள வி.ஜி.எம்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயிறு சம்பந்தமான பிரச்னைக்கு சிகிச்சை பெறுகிறார். அம்மருத்துவமனை தலைவர் மோகன்பிரசாத்திடம் கேட்டபோது, ''அமைச்சர் பெரியசாமி, கடந்த 10 ஆண்டுகளாக பரிசோதனை செய்துகொள்ள எங்கள் மருத்துவமனைக்கு வருவார். அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் செய்யப்பட்டன; நலமுடன் இருக்கிறார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ