உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்

சென்னை: கனிமவள ஊழல் தொடர்பாக சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர் ஆனார்.கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் கனிவளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். தற்போது அவர் உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ளார். அவர் கனிவளத்துறை அமைச்சராக இருந்த போது, குவாரியில் மண் அள்ள அனுமதிக்கப்பட்ட அளவை விட, 2.64 லட்சம் லோடு லாரி செம்மண் எடுத்ததால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்பட்டதாக வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இது குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.இந்த வழக்கில் நேரில் விசாரணைக்கு ஆஜர் ஆகுமாறு, பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இன்று (டிச.,17) சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர் ஆனார். அவர் அமலாக்கத்துறை அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Jay
டிச 17, 2024 20:55

இந்த வழக்கில் இவருக்கு தண்டனை கொடுக்க முடியுமா? தண்டனையே கிடைத்தாலும் ஜெயிலுக்கு போகறதில்லை. எதற்காக வழக்கு நடத்தி அரசு பணத்தை வீணடிக்க வேண்டும்?


Vijay D Ratnam
டிச 17, 2024 15:32

பல ஆண்டுகளாக இழுத்தடித்த வழக்கில் தீர விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் பொன்முடியையும் அவரது மனைவியையும் குற்றவாளி என்று அறிவித்து, இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் தலா ஐம்பது லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி இருக்கிறது. ஜாமினில் வெளியே வந்து மந்திரியாகி மக்களுக்கு சேவை செய்து கொண்டு இருப்பவரை இப்படி அலைய விடுறீங்களேப்பா.


Sankar SKCE
டிச 17, 2024 14:40

ஓசி மண்ணு இனிக்கும் இந்த ....


xyzabc
டிச 17, 2024 14:16

அடிக்கடி போய் விட்டு வா


sankaranarayanan
டிச 17, 2024 13:09

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் நாளை அடுத்து எந்த அமைச்சர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகப்போகிறாரோ தெரியவில்லை இப்படியே ஒவ்வொரு அமைச்சரும் அமலாக்கத்துறை சென்று கொண்டிருந்தால் பிறகு அந்த துறைக்கு என்ன மதிப்பு


sridhar
டிச 17, 2024 15:29

ஒன்றும் ஆகாது, picnic போவது போல் தான். பயப்பட எதுவும் இல்லை. எவ்வளவு ஊழல் வேணும்னாலும் செய்யலாம். விசாரணை , வழக்கு எல்லாம் முடியாது


முக்கிய வீடியோ