உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெம்பக்கோட்டை அகழாய்வில் ஈயம் கண்டுபிடிப்பு

வெம்பக்கோட்டை அகழாய்வில் ஈயம் கண்டுபிடிப்பு

சென்னை: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடந்த அகழாய்வில், முதல்முறையாக ஈயம் கிடைத்து உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை என்ற ஊரில், தமிழக தொல்லியல் துறை சார்பில், மூன்றாம் கட்ட அகழாய்வு பணி நடக்கிறது. இதில், கண்ணாடி மணிகள், அரிய கல்மணிகள், சுடுமண் பொம்மைகள், தங்க மணி, கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், அகல் விளக்குகள், சங்கால் செய்யப்பட்ட பதக்கம், சுடுமண் ஆட்டக்காய்கள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு,'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: விருதுநகர் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், 87 சென்டிமீட்டர் ஆழத்தில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் மற்றும் இரும்பு கிடைத்துள்ளது. மேலும், முதல்முறையாக 102 செ.மீ., ஆழத்தில் ஈயம் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.தமிழ்மக்கள் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய பதக்கங்கள் மற்றும் இதர கலைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளதை உறுதிசெய்யும் வகையில் கிடைக்கப்பெற்றுள்ள இந்த புதிய கண்டுபிடிப்புகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி. இவ்வாறு அந்த பதிவில் அமைச்சர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Raja k
மார் 21, 2025 11:50

இங்கே கருத்து பதிவிட்டவர்கள் எவ்வளவு அறிவாளிகள், உண்மையில் நீங்கள் எல்லாம் இந்த தமிழ் மண்ணின் மைந்தர்களா, அல்லது உங்கள் மூளை எல்லாம் சலவை செய்ய பட்டதா,,


கள்ளழகன்
மார் 20, 2025 11:04

கள்ளசாராய ஊறல் கிடைக்க வாய்ப்பு.


Appa V
மார் 20, 2025 08:44

குப்பை பொறுக்கிகள் கையில் ஒரு காந்தம் அடியில் பொருத்தப்பட்ட தாடியுடன் சாலை ஓரங்களில் தரையை பெருக்கின மாதிரி நடந்து செல்வார்கள். அதில் இரும்பு துண்டுகள் ஒட்டிக்கும் தமிழகம் மட்டும் அல்ல எங்கு தோண்டினாலும் இந்த மாதிரி ஏதாவது ஓட்ட உடைசல் கிடைக்கும்


Appa V
மார் 19, 2025 22:38

தேவையில்லாத ஆணி .. பேரீச்சம்பழ கொட்டைகள் எதுவும் ஈயத்துடன் கிடைக்கவில்லையா


Pats, Kongunadu, Bharat, Hindustan
மார் 19, 2025 20:28

இன்னும் நல்லா ஆழமா தோண்டுங்க. 5000 வருடத்துக்கு முன்னால வாழ்ந்த ஆதி சங்கத்தமிழன் குடிச்ச சரக்கு பாட்டில் கிடைக்கும். உலகிலேயே மூத்த குடி தமிழ்க்குடி என்பது நிரூபணம் ஆகும்.


rama adhavan
மார் 19, 2025 19:48

இப்படி துண்டு துண்டாக சிறு சிறு பொருட்கள் கண்டுபிடித்து என்ன ஆகப் போகிறது? இதை வைத்து என்ன முடிவு கிடைக்கும்? பொருட்கள் எந்த காலம் என தெரியும்? கார்பன் டேட்டிங் செய்தார்களா? ஒன்றும் புரியவில்லை. சினிமாவில் புதையல் பற்றிய விபரங்கள் பல தூண்டுக் காகிதங்களில் இருக்குமே, அது போல் உள்ளது. இதுபோல் குஜராத் கட்ச் பகுதியிலும் மோகஞ்சதாரோ நாகரீகம் என்று ஓரு அருங்காட்சியகம் சென்றோம். அங்கும் உடைந்த பானை, கோப்பை, கல், தேய்ந்த நாணயம் போன்றவை இருந்தன. ஓரு கிணற்றின், கட்டட சுவடுகள் இருந்தன. நிறைய எழுதி இருந்தன. ஆனால் சராசரி மனிதனால் விளங்கவில்லையே.


अप्पावी
மார் 19, 2025 19:44

பேரீச்சம் பழ வண்டிகளின் தடயம் கிடைக்கும் வரை தோண்டனும்.


Dharmavaan
மார் 19, 2025 19:43

ஒரு அடியில் கண்டுபிடித்ததை எப்படி அங்கு உலோகம் இருக்கிறது என்று நிர்ணயிக்கும் மக்களை ஏமாற்றும் ஜிகினா வேலை


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 19, 2025 19:41

அப்படிப்பட்ட தமிழன் அப்போ ஆரியர்களுக்கு அடிமையானான் .... இப்போ திராவிடர்களுக்கு அடிமையா இருக்கான் ..... எப்படிங்க இதெல்லாம் ??


ManiK
மார் 19, 2025 18:43

உலகத்தில் அனைத்து அல்லது பெரும்பாலான இடங்களில் கையால் தோண்டினாலே இதெல்லாம் கிடைக்கும். சம்மா வெட்டிவேலை செஞ்சு கோடில கணக்கு காட்டுவது மட்டுமே நோக்கம். மக்களை பழைய பெருமை யேசியே முட்டாளாக்க முயற்சி.