| ADDED : செப் 15, 2026 12:14 AM
வேலுாரில், அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தபோது, திடீரென மின்தடை ஏற்பட்டதால், மொபைல் போன் வெளிச்சத்தில் பேட்டி அளித்து உள்ளார். சென்னை முதல் கன்னியாகுமரி வரை, ஒரு வாரத்திற்கும் மேலாக, அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. மின்வெட்டை சரி செய்ய, த.வெ.க., அரசு நடவடிக்கை எடுக்காதது, கடும் கண்டனத்திற்குரியது. கோடைக்காலம் முடிந்தும், வெயிலின் தாக்கம் குறையாததால், செப்டம்பர் மாதத்திலும், மின் தேவை 4,000 மெகா வாட் அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க, தமிழக அரசு முன்கூட்டியே ஏற்பாடு செய்யாததே மின்வெட்டுக்கு காரணம். பொதுவாக அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், மின்தடை ஏற்படாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்வர். அதிகாரிகளின் முயற்சிகளை தாண்டி, மின்சாரம் தடைபடுவதற்கு, மின் பற்றாக் குறையே காரணம். தேவையான மின்சாரத்தை கொள்முதல் செய்து, மின்வெட்டு ஏற்படாமல், அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். - அன்புமணி தலைவர், பா.ம.க.,