உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் 14ல் அமைச்சர் பேச்சு

ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் 14ல் அமைச்சர் பேச்சு

சென்னை:பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பது உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் கடந்த மாதம் 16, 17ம் தேதிகளில், தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, 'டிட்டோஜாக்' சார்பில், தொடர் சாலை மறியல் போராட்டம் நடந்தது. வரும் 22ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டத்தையும் அறிவித்துள்ளனர். இதற்கிடையில், டிட்டோஜாக் உயர்மட்ட நிர்வாகிகளுக்கு பேச்சு நடத்த வருமாறு, பள்ளிக் கல்வித் துறை அழைப்பு விடுத்துள்ளது. அமைச்சர் மகேஷ் தலைமையில், தலைமை செயலகத்தில், வரும் 14ம் தேதி காலை 9:00 மணிக்கு பேச்சு நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை