வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆட்சி முடிய போகிறது பெரிய திட்டம் போட்டு எவ்வளவு ஆட்டைய போடலாம் இதுதான் இவர்களின் ஆலோசனை
சென்னை: திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை பகுதியில், கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைப்பது தொடர்பாக, வல்லுநர்கள் ஆய்வுக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், துாத்துக்குடி எம்.பி., கனிமொழி மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்திற்கு பின், அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:திருச்செந்துாரில் ஏற்பட்ட கடல் அரிப்புக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், துறை சார்ந்த வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கைகள் எடுக்க, முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, திருச்செந்துாருக்கு சென்று, கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தோம். துறை சார்ந்த வல்லுநர்களிடம், அதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவது குறித்து அறிக்கை கோரியிருந்தோம். இதையடுத்து, இந்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், திருச்செந்துார் கடல் அரிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான ஆலோசனைகளை, மாநில மற்றும் மத்திய அரசு துறைகள் சார்ந்த பேராசிரியர்கள், அறிவியலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஐ.ஐ.டி., பேராசிரியர் சுந்தரவடிவேல் ஆகியோர், காணொலி காட்சி வாயிலாக தெரிவித்தனர்; அறிக்கைகள் அளித்தனர்.மூன்று குழுவினரின் அறிக்கை ஒரே விதமாகவும், இரண்டு குழுவினரின் அறிக்கை வேறு விதமாகவும் இருந்தன. அந்த அறிக்கைகள் இரண்டு நாட்களில் இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்தம் கோரப்பட்டு, கடல் அரிப்பு தடுப்பு பணிகள் துவக்கப்படும். இதனால், பக்தர்கள் வழிபாட்டுக்கு பாதிப்பு இருக்காது. மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. திருச்செந்துார் கோவிலுக்கு ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
ஆட்சி முடிய போகிறது பெரிய திட்டம் போட்டு எவ்வளவு ஆட்டைய போடலாம் இதுதான் இவர்களின் ஆலோசனை