வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நானும் ஜெயிலுக்குப் போறேன், நானும் ஜெயிலுக்குப் போறேன். பார்த்துக்கங்க, நானும் ஜெயிலுக்குப் போறேன்.
திருச்சி: ''ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்கிறோம்,'' என, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்தார். திருச்சியில் நேற்று அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளருக்கு முழுமையான ஆதரவு அளிக்கிறோம். கட்சியின் இணை செயலர் சையத் பாரூக் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைத்துள்ளோம். எதிர்க்கட்சியாக இருப்பவர்கள், களத்தில் நின்று, மக்களின் உணர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். வெற்றி, தோல்வி ஜனநாயகத்தில் சமநிலையில் இருக்க வேண்டும். பயத்தின் காரணமாக, அ.தி.மு.க., பின்வாங்கி உள்ளது.வரும் சட்டசபை தேர்தலில், எங்கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்குவதாக, முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். லோக்சபா தேர்தலில் தொகுதி பெறும் அளவுக்கு எங்கள் கட்சி வளரவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
நானும் ஜெயிலுக்குப் போறேன், நானும் ஜெயிலுக்குப் போறேன். பார்த்துக்கங்க, நானும் ஜெயிலுக்குப் போறேன்.