உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருணாநிதியின் மூத்த மகன் முத்து காலமானார்!

கருணாநிதியின் மூத்த மகன் முத்து காலமானார்!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார். அவருக்கு வயது 77.கருணாநிதி- பத்மாவதி தம்பதிக்கு மூத்த மகனாக 1948ம் ஆண்டு ஜனவரி 14ல் பிறந்தவர் முத்து. தந்தை கருணாநிதியின் கலையுலக வாரிசாக திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டார். 1970களில் வெளியான பூக்காரி, அணையா விளக்கு, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். நடிப்பு திறமையையும் கடந்து சொந்த குரலில் பாடியும் இருக்கிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u5fvcoa1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மறைந்த கருணாநிதியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக, அவரை விட்டு பிரிந்தார். பல காலமாக தனித்து வாழ்ந்து வந்த மு.க. முத்து வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

முத்துவின் மறைவை அறிந்த முதல்வர் ஸ்டாலின், ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ள அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Padmasridharan
ஜூலை 20, 2025 06:29

நாட்டு மக்களுக்கு சஹோதரனாக இருக்க விரும்புவருக்கு குடும்பத்தில் இவரிடம் இல்லையா. நாம் இருவர் நமக்கு இஒருவர் இல்லையா சாமி


Natarajan Ramanathan
ஜூலை 19, 2025 22:12

ஒருத்தருக்காவது அப்பன் சாயல் இருக்கிறதா?


Rajah
ஜூலை 19, 2025 19:02

காதலின் பொன் வீதியில் பாடலில் மு.க முத்துவின் சிகை அலங்காரம், தம்பியின் சிகை அலங்காரம் இதில் உங்களுக்கு பிடித்தது எது ?


Natchimuthu Chithiraisamy
ஜூலை 19, 2025 18:53

பல ஆண்டாக கவலைக்கிடமாக இருந்திருப்பர் அதை கருணாநிதியே தன் கடைசி நேரத்தில் பொதுவெளியில் சொன்னார் ரெம்ப காலமாக கஷ்டப்பட்டதை சேதிகள் சொல்லவே இல்லை. தம்பிகள் பல லட்சம் கோடி பணமுள்ள போது ஏழையாக சாகவேண்டியதாக உள்ளது. இந்த ஏழை வாரிசுகள் எங்க தாத்தா முதல்வர் என்று சொல்லட்டும்.


என்றும் இந்தியன்
ஜூலை 19, 2025 18:24

இது வரைக்கும் இவர் கருணாநிதி குடும்பத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து வந்தார்???காரணம் யார் ??? ஸ்டாலின் குடும்பத்தினர் கனிமொழி ......கருணாநிதி குடும்பத்தினர்??? இப்போ அந்த ஸ்டாலின் துக்கம் விசாரித்தல் கனிமொழி பாதியில் தனது மேடை பேச்சை விடுதல்???அம்மாடி இது தான் திருட்டு திராவிட அறிவிலி குசலம் விசாரித்தல்????


ஆரூர் ரங்
ஜூலை 19, 2025 16:24

அந்தக் காலத்தில் பேசப்பட்ட அரசியல் வசனம் மகன் நடித்தது பிள்ளையோ பிள்ளை, அப்பா அடிப்பது கொள்ளையோ கொள்ளை. சர்க்காரியா கமிஷன் விசாரணையில் மேம்பால ஒப்பந்ததாரர் லஞ்சத்துக்கு பதிலாக அப்படத்தின் விநியோக உரிமையை மிக அதிக விலைக்கு தனது தலையில் கட்டி விட்டனர் என்று வாக்குமூலம் அளித்தாராம். பெரியவரும் பிற்காலத்தில் அவரை மன்னித்து இன்னும் பல பெரிய கட்டிட ஒப்பந்தங்களை அளித்து பயன்பெற்றார்.


Iniya
ஜூலை 19, 2025 15:53

எழுதுங்கள் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.


வாய்மையே வெல்லும்
ஜூலை 19, 2025 15:25

இவர் அரசியலுக்கு வராமல் மக்களிடம் மறைமுக நன்மதிப்பு பெற்றவர் என எடுத்துக்கொள்ளலாம்


Durai Kuppusami
ஜூலை 19, 2025 14:35

இரங்கல்...


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 19, 2025 14:13

எம்ஜிஆர் உடன் ஏற்பட்ட பிணக்கிற்கு பிறகு கருணாநிதி இவரை எம்ஜிஆர் இடத்தில் திரைத்துறையில் கொண்டு வளர்ப்பார்த்தார். அந்த கால கட்டத்தில் எம்ஜிஆர் திரைப்படங்கள் ஏ சென்ட்ரலில் நான்கு இலட்ச ரூபாய்க்கு விலை போகும். அது போல இவருடைய திரைப்படங்களும் நான்கு இலட்ச ரூபாய்க்கு விலை போக முக்கிய நகரங்களில் பாலங்கள் கட்டினார் கருணாநிதி. பாலம் காண்டிராக்ட் எடுத்தவர் நான்கு இலட்ச ரூபாய்க்கு இவருடைய திரைப்படம் ஒரு ஏரியாவிற்கு வாங்கி வெளியிட வேண்டும். அதன் படி கட்டப்பட்டது தான் கோயம்புத்தூர் இரயில் நிலையம் அருகில் உள்ள உப்பிலிபாளையம் மேம்பாலம். இவருடைய குடும்பம் கஷ்டத்தில் இருந்த காலத்தில் ஜெயலலிதா ஐந்து இலட்சம் ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்து இவருக்கு நிரந்தர வருமானம் வரும் படி செய்து தந்தார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை