உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.எல்.ஏ., மகன் ஜாமின் மனு போலீஸ் பதில் தர உத்தரவு

எம்.எல்.ஏ., மகன் ஜாமின் மனு போலீஸ் பதில் தர உத்தரவு

சென்னை:இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் மகன், மருமகள் தாக்கல் செய்த ஜாமின் மனுவுக்கு, போலீஸ் தரப்பு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை பல்லாவரம் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் வீட்டில் பணிபுரிந்த இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக, ஆன்டோ மற்றும் அவரது மனைவி மார்லினா ஆகியோருக்கு எதிராக, நீலாங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஆதிதிராவிடருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது; இருவரும் கைது செய்யப்பட்டனர்.ஜாமின் கோரி இருவரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு, நீதிபதி நிர்மல்குமார் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, போலீஸ் தரப்புக்கும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் நீதி பதி உத்தரவிட்டார். விசாரணையை வரும் 21க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை