உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தர்ணா

அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தர்ணா

சென்னை:அன்புமணி ஆதரவு பா.ம.க., -- எம்.எல்.ஏ.,க் கள், சட்டசபைக்கு வெளியே தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். பா.ம.க.,வில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே, மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்களில் மூன்று பேர், அன்புமணிக்கு ஆதரவாகவும், இரண்டு பேர் ராமதாசுக்கு ஆதரவாகவும் உள்ளனர். பா.ம.க., சட்டசபை குழு தலைவர் பதவியில் இருந்து, ஜி.கே.மணியை நீக்க வேண்டும் என, சபாநாயகர் அப்பாவுவுக்கு, அன்புமணி கடிதம் அனுப்பி யிருந்தார். இந்த கடிதத்தின் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. அது தன் பரிசீலனையில் இருப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற் காக, பா.ம.க., - எம்.எல்.ஏ.,க் கள் ஐந்து பேரும் நேற்று வந்தனர். ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.மணி, அருள் ஆகியோர், தங்களது இருக்கையில் அமர்ந்து சபை நடவடிக்கை களில் பங்கேற்றனர். அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சபைக்கு வரவில்லை. நான்காவது நுழைவாயில் அருகே தரையில் அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டனர். பா.ம.க., சட்டசபை குழு தலைவர் பொறுப்பில் இருந்து ஜி.கே.மணியை நீக்கும்படி வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை