உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீப திருவிழா விவரம் குறித்த மொபைல் செயலி வெளியீடு

தீப திருவிழா விவரம் குறித்த மொபைல் செயலி வெளியீடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தீப திருவிழா விவரம் குறித்த மொபைல் செயலியை, கலெக்டர் வந்தனா கார்க் வெளியிட்டார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த, 15ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் முக்கிய விழாவான பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் இன்று நடக்க உள்ளது. வரும், 24ல் முக்கிய விழாவான தீப திருவிழாவில், அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. விழாவை காண பல்வேறு மாநிலம், பல்வேறு மாவட்டங்களிலிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம், தேசிய தகவலியல் மையம் இணைந்து கார்த்திகை தீபம் –2026 என்ற மொபைல் செயலி தயார் செய்து, அவற்றை கலெக்டர் வந்தனா கார்க் வெளியிட்டார். இதில், பக்தர்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட், கார் பார்க்கிங் வசதி, மருத்துவ முகாம்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள், காவல் சேவை மையங்கள், கழிவறைகள், அவசர உதவி எண், 108 ஆம்புலன்ஸ், அவசர மொபைல் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள், வாகனங்களுக்கான மாற்றுப்பாதை, அன்னதானம் வழங்குமிடம், அவசர தேவைக்கான கட்டுப்பாட்டு உதவி எண்கள், காணாமல் போன குழந்தைகளை கண்டறிய உதவி எண்கள், திருக்கோவில் பற்றிய விவரங்கள் இதில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை