உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழை

 டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழை

சென்னை; 'தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன் அறிக்கை: தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேலும், தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சில இடங்களில், இரவு மற்றும் அதிகாலையில், லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில், குறைந்தபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் குறைவாக பதிவாகலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் இரவு, அதிகாலையில் லேசான பனிமூட்டம் நிலவும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்