உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மார்ச் 5 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

 மார்ச் 5 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், இன்று முதல் மார்ச் 5 வரை, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை: நேற்று காலை வரையிலான 24 மணி நேரத் தில், தென்காசி மாவட்டம் ஆயக்குடி பகுதியில் அதிகபட்சமாக, 7 செ.மீ., மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக, தென்காசி மாவட்டம் குண்டாறு அணை, செங் கோட்டை, ராமநதி அணை; கோவை மாவட்டம் உபாசி, வால்பாறை ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகம் உட்பட தென் மாநிலங்களின் மீது, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், இன்று முதல் மார்ச் 5 வரை, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில், இன்றும் நாளையும் அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில், இன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டமாக காணப்படும்; ஒருசில இடங்களில், அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ