உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் டிச.31 வரை மிதமான மழை நீடிக்கும்; வானிலை மையம் கணிப்பு

தமிழகத்தில் டிச.31 வரை மிதமான மழை நீடிக்கும்; வானிலை மையம் கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தெற்கு ஆந்திர - வடதமிழக கடலோரப்பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. தமிழகத்தில் டிச.31ம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும்' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர-வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழந்தது. தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் டிச.31ம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும்.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

God yes Godyes
டிச 26, 2024 19:07

மழை காலங்களை கோடை காலமாக மாற்றி கடல் நீர் பெருக்கத்தை குறைப்பதுடன் கடல் நீரை மட்டுமே விவசாயத்துக்கு பயன் படுத்த வேண்டும்.கடல் நீர் உப்பை அகற்றும் வழியை கண்டு பிடிக்கவேண்டும்.


MARI KUMAR
டிச 26, 2024 16:10

மழை கொட்டட்டும் நாடு செழிக்கட்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை