உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்துக்களை காக்க மோடி தவறிவிட்டார்: அர்ஜுன் சம்பத்

ஹிந்துக்களை காக்க மோடி தவறிவிட்டார்: அர்ஜுன் சம்பத்

கோவை: “ஹிந்துக்களை தாக்கிய பாக்., பயங்கரவாதிகளை வேரறுக்க வேண்டும்,” என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், ஆவேசமாக பேசினார்.ஜம்மு - காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில், 28 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல், மேற்கு வங்கத்தில் வக்ப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால், ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

அரசுக்கு தோல்வி

இவ்விரு சம்பவங்களையும் கண்டித்து, ஹிந்து மக்கள் கட்சியினர் நேற்று, கோவை ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்; போலீசார் தடுத்து நிறுத்தினர்.அதன்பின், அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அளித்த பேட்டி: மேற்கு வங்கத்தில் மம்தா அரசு, இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் கைகோர்த்து கொண்டு, ஹிந்துக்கள் மீது வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. ஆறு பேர் அங்கு கொல்லப்பட்டுள்ளனர்; ஹிந்துக்களை குறிவைத்து தாக்குகின்றனர்.மம்தா அரசு அவர்கள் யாரையும் கைது செய்ய வில்லை. அதனால் மம்தா அரசை, 'டிஸ்மிஸ்' செய்திருக்க வேண்டும்; அதையும் செய்யவில்லை. இதேபோல் தற்போது, காஷ்மீரில் ஹிந்துக்களா எனக்கேட்டு கேட்டு, அப்பாவிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்று உள்ளனர்.இந்த விஷயத்தில் மத்திய அரசு, ஹிந்துக்களை காக்கத் தவறி விட்டது. பிரச்னைக்குரிய இடங்களை கண்டறிந்து, அங்கெல்லாம் ராணுவ பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அதை செய்யாததில் அரசுக்கு தோல்விதான். ஜம்மு - காஷ்மீரை ஆளும் ஒமர் அப்துல்லா, பாகிஸ்தானுக்கு ஆதரவானவர்.ஒவ்வொரு ஹிந்துவையும் காக்க வேண்டியது, அரசுகளின் கடமை.இப்படி ஹிந்துக்களை குறிவைத்து கொன்ற பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை வேரறுக்க வேண்டும். அதை செய்யாமல், சிந்து நதியில் செல்லும் தண்ணீரை நிறுத்துகிறோம் என மோடி அரசு கூறுவதெல்லாம் ஏற்புடையதாக இல்லை.

வேடிக்கை கூடாது

கண் துடைப்புக்காக எதையோ அறிவிக்கின்றனர். பிரதமர் மோடி மீது, ஹிந்துக்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையை அவர்தான் காப்பாற்ற வேண்டும்.பாகிஸ்தானின் இத்தகைய செயல்களை, இந்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்கக்கூடாது. ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு துணை இருப்போருக்கும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Palanisamy T
ஏப் 27, 2025 05:32

ஹிந்துக்களை காக்க மோடி அவர்கள் தவறிவிட்டார் என்றுச் சொல்வது தவறாகி விடும். இந்தியா மதச் சார்பற்ற நாடு. உலக அரங்கில் நல்ல செல்வாக்கும் மரியாதை பெற்ற நாடு. இந்த தாக்குதலால் காஷ்மீர் மக்களும் பயந்த நிலையில் இருக்கின்றார்கள். காஷ்மீரில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல்கள் ஆட்சியாளர்கள் சம்பந்தப் பட்ட அதிகாரிகளின் கவனக் குறைவாகக் கூட இருக்க வாய்ப்புள்ளது. இதில் நிச்சயம் பாகிஸ்தான் ISI சம்பந்தப்பட்டுள்ளது . காலம்தான் இதற்க்கு பதில் சொல்லும்.


VENKATASUBRAMANIAN
ஏப் 26, 2025 08:41

அர்ஜீன் சம்பத்தின் ஆதங்கம் புரிகிறது. ஆனால் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.௧௪௦கோடி மக்கள் சம்மந்தப்பட்டது


Palanisamy T
ஏப் 26, 2025 08:21

ஹிந்துமுன்னணி அமைப்பினர் தங்களின் வேண்டாத முரண்பட்ட மத சித்தாந்தங்களையும் கொள்கைகளையும் தமிழகத்திற்கு கொண்டுவர வேண்டாம் . தமிழகம் சைவ சித்தாந்த கொள்கையும் கோட்ப்பாடுகளையும் கொண்ட மண். தெய்வீகத் தமிழால் மட்டும் எழுதப் பட்ட சொல்லப் பட்ட பல அரிய உண்மைகள். பன்னிரு ஆழ்வார்களையும் 63 நாயன்மார்களையும் அரிய சித்தர்களையும் பெத்தெடுற்ற மண் . இங்கே அதிகாரப் பூர்வமாக மும்மொழிக் கொள்கைகளை ஏற்படுத்த வேண்டாம். ஹிந்துமத மென்றால் நம் நினைவுக்கு வருவது சமஸ்க்ருத மொழி. அன்று பல்வேறு கூட்டுமொழிகளால் உருவாக்கப் பட்ட மொழி. தமிழ் சமஸ்கிருத கூட்டு மொழியால் காலத்தால் உருவானது இன்று கேரளாவில் பேசும்மொழி. 1000 ஆண்டுகளுக்கு முன் கேரளா என்ற மாநிலமில்லை. மீண்டும் இன்னொரு மொழிக் கலப்பு பிரிவினை வேண்டாம்.


sridhar
ஏப் 26, 2025 16:24

சைவ வைணவம் வேறு , ஹிந்து மதம் வேறு என்பது ஏற்புடைய வாதம் அல்ல. சமஸ்க்ரிதம் நமக்கு விரோதியும் அல்ல. வீணாப்போன போலி திராவிட சித்தாந்தத்தை ஹிந்துக்கள் விட்டு ஒழிக்கவேண்டும். நம் முன்னோர்கள் தமிழ் சமஸ்க்ரிதம் இரண்டையும் படித்தார்கள் . அவர்களை விட நமக்கு ஆன்மீக அறிவு அதிகமா ? ஹிந்து விரோத விஷ கழகங்களுக்கு பலி ஆக வேண்டாம்.


Rajan A
ஏப் 26, 2025 08:08

மோடிஜி நிதானமாக அடித்தாலும் அது 100 டன் எடை இருக்கும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்ய முடியாது. இன்று நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வரும் என்றும் கணிக்க முடியாது. பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்


Dharmavaan
ஏப் 26, 2025 07:56

இவன் சொல்லுவது அவ்வளவு சுலபமா எவ்வளவு எதிர்ப்பு முஸ்லிம் ஆதரவு எவ்வளவு சிந்திக்காத பேச்சு


Palanisamy T
ஏப் 26, 2025 05:02

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று ராணுவ அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் அவர்களும் பொறுப்பேற்று பதவி விலகியிருக்க வேண்டும். இந்தியநாட்டில் இதுவெல்லாம் நடக்காது. ராணுவ பாதுகாப்பிலும் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பிலும் ஏதோவொரு பெரிய குறைபாடுகள் இருந்துள்ளது. மற்ற நல்ல மக்களாட்சி கொண்ட நாடுகளில் இப்படி நடந்திருந்தால் இந்நேரம் பதவி விலகி யிருப்பார்கள்.


Dharmavaan
ஏப் 26, 2025 07:59

உன்னை போன்ற தேச துரோகிகள் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் இந்தி கூட்டணி கட்சிகள் இருக்கும் வரை கட்டுப்படுத்துவது கடினமே


sridhar
ஏப் 26, 2025 16:27

இதை விட அதிகமாக கள்ளச்சாராயம் குடித்து இறந்தார்கள் . அப்போது முதலமைச்சர் பதவி விலக சொல்லி கேட்டீர்களா ? 1998 ல் தமிழகத்தில் 58 பேர் குண்டு வெடிப்பில் இறந்தபோது இதை சொன்னேர்களா ?


Palanisamy T
ஏப் 26, 2025 03:54

பிரதமர் ஒட்டுமொத்த இந்தியகுடி மக்களை காப்பாற்றுவது அவரது பொறுப்பு, அவரது கடமை. இந்து முன்னணி அமைப்பினர் பொறுப்பற்ற தனமாக பேசக் கூடாது. தீவிரவாதம் எங்கிருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.


Dharmavaan
ஏப் 26, 2025 08:00

நீ ஏசுவது உனக்கு புரிகிறதா


புதிய வீடியோ