உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலின் வைத்த கோரிக்கைக்கு உடனடியாக களமிறங்கிய மோடி

ஸ்டாலின் வைத்த கோரிக்கைக்கு உடனடியாக களமிறங்கிய மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக அரசு கோரிக்கை வைத்த அடுத்த நாளே, நெல்லின் ஈரப்பதத்தை அறிய, நான்கு பேர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.மத்திய அரசின் சார்பில், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கிறது. அதன்படி, நடப்பு சீசனில், 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுஉள்ளது. டெல்டா மாவட்டங்களில், நெல் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், சில தினங்களுக்கு முன் திடீரென மழை பெய்தது.இதனால், விவசாயிகளிடம் இருந்து, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்குமாறு, மத்திய அரசுக்கு, தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று முன்தினம் கடிதம் எழுதினார். இதே கோரிக்கையை, டில்லியில் நேற்று முன்தினம், மத்திய உணவு துறை செயலரிடம், தமிழக உணவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.இதையடுத்து, தமிழகத்தில் நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்ய, இந்திய உணவு கழக அதிகாரிகள் நான்கு பேர் குழுவை மத்திய அரசு நேற்று அமைத்துள்ளது. இக்குழு, சில தினங்களில் தமிழகம் வந்து, தமிழக அரசு அதிகாரிகளுடன் இணைந்து, மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று, நெல் மாதிரிகளை எடுத்து வந்து, ஆய்வகத்தில் பரிசோதிக்க உள்ளது.அக்குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப, நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்யும், நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்துவது குறித்து, மத்திய அரசு முடிவு செய்யும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Azar Mufeen
ஜன 22, 2025 14:00

இரு களவாணி கட்சிகளும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி உறுதி, இனி சாரையும் கண்டுபிடிக்க வேணாம், சாட்டையாளும் அடிச்சுக்க வேணாம்


jayvee
ஜன 22, 2025 13:34

அப்படின்னா சீமான் சொன்னது சரிதான் என்று தும்பிகள் குதிப்பார்கள் .. பிஜேபி யின் பி டீம் திமுகதான் என்று


Rengaraj
ஜன 22, 2025 13:09

இதெல்லாம் உடன்பிறப்புகளுக்கு தெரியாது.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 22, 2025 12:23

போட்டோ பொருத்தமாத்தான் போட்டிருக்கீங்க.. இருந்தாலும் மோடி ஜி ஸ்டாலின் ஜியை கட்டி புடிக்கிறமாதிரி போட்டோ இல்லீங்களா ????


Ganapathy
ஜன 22, 2025 12:05

எல்லாம் திமுக எம்பிக்களின் எண்ணிக்கை செய்யும் வேலை. பாஜகவும் அரசியல் கட்சிதானே.


Ganapathy
ஜன 22, 2025 12:05

எல்லாம் திமுக எம்பிக்களின் எண்ணிக்கை செய்யும் வேலை. பாஜகவின் அரசியல் இது.


Balasubramanyan
ஜன 22, 2025 11:05

Thiru Velan Iyangar.you do not know what happened in appointing VC in prestigious universities in tamilnadu. As a educationist I know. In one university a person who served asPA to the ministe who worked throughout whenever that party Moses to power and never worked in university more than 15 years of his total service appointed as VC on 2005 though many talented persons available. The other Dravidian party appointed one person who was arrested by CBI and kept in Tihar jail as VC sine he belongs to minority ommunity. As CM and education ministers as pro hancellors influenced the governor to get their persons as VC. There were police investigation in their period nobody knows what happened. I politicians comes as chancellor everything will godown


Velan Iyengaar
ஜன 22, 2025 12:26

How will you justify Union Government when it imposes its dictates through such puppets being positioned in State run Universities where the entire funding is from States Exchequer and the administrative control fully vesting with State Government??


sankaranarayanan
ஜன 22, 2025 10:48

இதுபோன்றே மத்திய அரசுடன் மாநில திராவிட மாடல் அரசு எப்போதுமே மோதல் போக்கை கைவிட்டுவிட்டு சகஜமாக நல்லிணக்கமாக பேசி ஒவ்வொரு திட்டத்தையும் மக்களின் நலன்கருதி நடைபப்டுத்தவேண்டும்


Ganesh
ஜன 22, 2025 10:07

நன்று... இதே போல் மத்திய மாநில அரசுகள் சேர்ந்து பணியற்றினால் நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்


T Jayakumar
ஜன 22, 2025 09:56

இதே போல் அமலாக்க துறை நடத்திய ரெய்டுகளில் சிக்கிய மந்திரிகளின் வழக்குகளை விரைந்து முடித்து தண்டனை வாங்கி தர வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை