உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கண் மருத்துவ சங்க துணைத்தலைவராக மோகன் ராஜன் தேர்வு

கண் மருத்துவ சங்க துணைத்தலைவராக மோகன் ராஜன் தேர்வு

சென்னை : அகில இந்திய கண் மருத்துவ சங்கத்தின் துணைததலைவராக, டாக்டர் மோகன் ராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அகில இந்திய கண் மருத்துவ சங்கம், 29,000 கண் டாக்டர்கள் கொண்ட உலகின் மிகப்பெரிய மருத்துவ சங்கம். இந்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் டில்லியில் நடந்தது.இதில், சங்கத்தின் துணை தலைவராக, சென்னை ராஜன் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மோகன் ராஜன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.இவர், 2027ம் ஆண்டில் இருந்து, அகில இந்திய கண் மருத்துவ சங்க தலைவராக செயல்பட உள்ளார். இச்சங்கத்தின் 84 ஆண்டு கால வரலாற்றில், தமிழகத்தில் இருந்து தேர்வான ஐந்தாவது தலைவர் என்ற பெருமையை டாக்டர் மோகன் ராஜன் பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி