உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எத்தனால் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளித்து மக்காச்சோளத்தில் அதிக ஆராய்ச்சி

எத்தனால் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளித்து மக்காச்சோளத்தில் அதிக ஆராய்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை.: ''பயோ எத்தனால் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளித்து மக்காச்சோளத்தில் அதிக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன,'' என கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பொங்கல் விழா நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்ற, பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:விவசாயிகள் வளர்ச்சி, மேம்பாட்டுக்காக பல்கலை எப்போதும் துணை நிற்கிறது. இன்று உணவு உற்பத்தி, 32.50 கோடி டன்னாக உள்ளது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து, ஏற்றுமதி செய்யும் வல்லரசு நாடாக உள்ளோம். இதில் வேளாண் பல்கலையின் பங்கு முக்கியமானது. 900க்கும் மேற்பட்ட ரகங்களை கண்டறிந்துள்ளோம். இதில், 138 ரகங்கள் இன்றும் விதைச்சங்கிலியில் உள்ளன. குறைந்த வயது, நல்ல விளைச்சல், பருவகால மாற்றத்துக்கு ஏற்றதாக இருக்கும் வகையில், புதிய ரகங்கள் கண்டறியப்படுகின்றன. பல்கலையின், 1500 தொழில்நுட்பங்களில், 500 க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்கள் விவசாயிகளால் பயன்படுத்தப்படுகின்றன. பூச்சி, நோய்கள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை சந்திக்கிறோம். பல்கலையில், மக்காச்சோளம் வாயிலாக எத்தனால் தயாரிப்புக்காக, பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மக்காச்சோளத்தில் சாறு அதிகம் இருக்குமாறு, புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பயோ எத்தனால் தயாரிப்புக்கு, முக்கியத்துவம் அளித்து மக்காச்சோளத்தில் அதிக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.பல்கலைக்கழக பயிர் மேலாண்மை இயக்குனர் கலாராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
ஜன 15, 2025 07:52

பல பில்லியன் டாலர் லாபம் பார்க்கும் சக்தி வாய்ந்த திராவிட சாராய நிபுணர்களிடம் இது பற்றி குறிப்பாக ஒரு செய்தி சொன்னால் போதும் - அடுத்த நிமிடமே அத்தனை நிபுணர்களையும் விலைக்கு வாங்கி விடுவார்கள்.


J.V. Iyer
ஜன 15, 2025 04:10

இதில் புதிதாக என்ன ஆராய்ச்சி? கனடாவில் இதைத்தானே நாற்பது ஆண்டுகளாக செய்துகொண்டு இருக்கிறார்கள்?


S Ramkumar
ஜன 15, 2025 09:52

கனடாவில் நாற்பது ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு உள்ளார்கள். அவர்கள் உங்களுக்கு கண்டுபிடிப்புகளை தருவார்களா? பொய் பெயரில் ஒளிந்து கொண்டு கருத்து இது மாதிரி போடும் இருநூறு உ பி.