உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தலில் காங்., தோற்றாலும் உயிரோட்டமாக இருக்கும் சொல்கிறார் கார்த்தி எம்.பி.,

தேர்தலில் காங்., தோற்றாலும் உயிரோட்டமாக இருக்கும் சொல்கிறார் கார்த்தி எம்.பி.,

மானாமதுரை : ''லோக்சபா தேர்தலில் தோல்வி ஏற்பட்டாலும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் உயிரோட்டமாக இருக்கும் ''என சிவகங்கை கார்த்தி எம்.பி., தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tevxz1kr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்., பூத் ஏஜன்ட்களுக்கு மாவட்டதலைவர் சஞ்சய்காந்தி தலைமையில் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் பங்கேற்ற கார்த்தி எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது:

தேர்தல் நிதி பத்திரம் தொடர்பான உத்தரவு காலதாமதமாக வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நிதி வசூலிப்பதை கோர்ட் நிறுத்தி உள்ளதே தவிர வாங்கிய நிதியை திருப்பி கொடுக்க உத்தரவிடவில்லை. கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களில் மக்கள் பா.ஜ.,வை புறக்கணிப்பதை போன்று வடமாநிலங்களிலும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அக்கட்சியை புறக்கணிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.சிவகங்கை லோக்சபா தொகுதியில் கட்சிக்குள் எவ்வித சண்டை,சச்சரவும் கிடையாது. அகில இந்திய பார்வையாளர் வந்தபோது ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகிகளும் இத்தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு தான் ஒதுக்க வேண்டும். மீண்டும் வேட்பாளராக என்னைத்தான் நிறுத்த வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளனர். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டாலும் கூட காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கட்சி உயிரோட்டமாக இருந்து செயல்படும். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் காங்.,- தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி