உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அழுத்தம் கொடுக்காத எம்.பி.,க்கள்; 40 பேர் இருந்தும் என்ன பயன்? கேட்கிறார் இ.பி.எஸ்.,

அழுத்தம் கொடுக்காத எம்.பி.,க்கள்; 40 பேர் இருந்தும் என்ன பயன்? கேட்கிறார் இ.பி.எஸ்.,

சேலம்: 'நீட் தேர்வை ரத்து செய்வதாக, தி.மு.க., அரசு போலி நாடகத்தை நடத்துகிறது. பார்லி.,யில் அழுத்தம் கொடுக்க தவறிவிட்டு, மற்றவர்கள் மீது பழிபோடுகிறார்கள்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பினார்.சேலம், எடப்பாடியில் நீட் தேர்வால், தற்கொலை செய்து கொண்ட மாணவி புனிதா வீட்டிற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நீட் தேர்வை ரத்து செய்ய தி.மு.க., எடுத்த நடவடிக்கைகள் என்ன? தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்களின் போலி அறிவிப்பால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வை கொண்டு வந்ததே தி.மு.க.,வும்., காங்கிரசும் தான்.

போலி நாடகம்

நீட் தேர்வை ரத்து செய்வதாக, தி.மு.க., அரசு போலி நாடகத்தை நடத்துகிறது. பார்லி.,யில் அழுத்தம் கொடுக்க தவறிவிட்டு மற்றவர்கள் மீது பழிபோடுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் பலமுறை பிரதமரைச் சந்தித்தும் அழுத்தம் கொடுக்கவில்லை. மருத்துவ கனவு உள்ள மாணவர்கள் நீட் தேர்வில் போதுமான மதிப்பெண் பெறவில்லை என்பதற்காக தவறான முடிவை எடுக்காமல் இதர கோர்ஸ்களில் சேர்ந்து வாழ்வில் முன்னேறலாம்.

என்ன பயன்?

மாணவர்கள் தவறான முடிவை எடுக்கக்கூடாது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என நம்பி ஏமாந்த மாணவர்கள் உயிரை விட்டு வருகிறார்கள். 40 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு என்ன பயன்? தி.மு.க., எம்.பிக்கள் தகுந்த அழுத்தம் கொடுத்திருந்தால் நிச்சயம் தீர்வு கிடைத்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
அக் 10, 2024 22:25

நீங்கள் கூறும் அந்த நாற்பது பேரும் பாராளுமன்றத்தில் உள்ள உணவகத்தில் உள்ள சப்ளையர்களுக்கு நன்றாக அழுத்தம் கொடுத்து நன்றாக வயிறுமுட்ட சாப்பிடுகிறார்கள். மக்களுக்கு அதெல்லாம் தெரிவதில்லை.


மீணா
அக் 10, 2024 16:38

அழுத்தம் குடுத்தால் அழுத்த படுவார்கள்


அப்பாவி
அக் 10, 2024 16:30

என்ன அழுத்தம் குடுக்கிறது? ஒன்றிய அரசுக்கு இவிங்க தயவு தேவையில்லை. மத்திய அரசு கவிழ்வதற்கு ஏதாவது ஐடியா இருந்தா குடுங்க. போய் நாயுடு, நிதீஷ் கிட்டே பேசி ஆதரவை வாபஸ் வாங்கச் சொல்லுங்க. பிறகு 40 எம்.பி தயவு கேட்டு அவிங்க எறங்கி வந்தா, நீட் தேர்வை ரத்து செய்ய வாய்ப்பு உண்டு. நீங்களும் ஸ்டிக்கர் எல்லாம் வெச்சுக்கலாம்.


S.kausalya
அக் 10, 2024 16:26

அது உங்களுக்கும் பொருந்தும் எடப்பாடியாரே . இத்தனை எம்எல்ஏக்க ளை வைத்து கொண்டு எதிர் கட்சி தலைமை கொண்டுள்ள நீங்கள் தமிழகத்தை எப்படி பார்க்கிறீர்கள் என சிந்தியுங்கள். நீங்கள் முதல்வராக இருந்த போது திமுக எப்படி செயல் ஆற்றிய து. ஒரு சிறிய பிரச்சனையையும் ஊதி ஊதி பெரியதாக்கி ஆனார்கள். ஆனால் தற்போது நீங்கள்,, எல்லோரும் குரல் கொடுத்த பின் மெதுவாக விழித்து எழுந்து குரல் கொடுத்து விட்டு பின் தூங்கி விடுகிறீர்கள் . களம் சென்று போராட வேண்டும். ஆர்பாட்டம் செய்ய வேண்டும். தொண்டர்கள் தயாராக உள்ளனர்.நீங்கள் இப்படி மெது குரலில் பேசி நிற்கிறீர்கள். வேகம் ஆவேசம் வேண்டும். மக்களுக்கு அது தான் வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை