உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராக ம.ராசேந்திரன் தேர்வு

தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராக ம.ராசேந்திரன் தேர்வு

சென்னை: தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராக தஞ்சை தமிழ்ப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன் தோ்வு செய்யப்பட்டுள்ளார்.இந்திய மொழிகளிலேயே தமிழுக்குதான் முதல் கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்கிய பெருமை தமிழ் வளர்ச்சிக் கழகத்தையே சேரும். 1946ல் சென்னை மாகாணக் கல்வி அமைச்சராக இருந்த தி.சு. அவினாசிலிங்கம் இந்த கழகத்தை உருவாக்கினார். 1947ல் நாடு சுதந்திரம் பெற்றதும் கலைக்களஞ்சியம் திட்டத்தை இந்தக் கழகம் அறிவித்தது.கலைக்களஞ்சியம் தயாரிப்பதற்கான அறிஞர் குழு அப்போதைய சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தலைமையில் அமைக்கப்பட்டது. அதில் மு.வரதராசன், ரா.பி.சேதுப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரம், டி.கே.சிதம்பரநாத முதலியார் ஆகியோா் உறுப்பினர்களாகவும் கல்கியும், கே. சுவாமிநாதனும் செயலாளர்களாகவும் இருந்துள்ளனர்.தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் இதுவரை கலைக்களஞ்சியம், குழந்தைகள் கலைக்களஞ்சியம் ஆகியவை தலா 10 தொகுதிகளும், மருத்துவக் களஞ்சியம் 13 தொகுதிகளும் சித்தமருத்துவக் களஞ்சியம் 7 தொகுதிகளும், ஆங்கில மொழியாக்கம் 7 தொகுதிகளும் அறிவியல் தொழில் நுட்பக் களஞ்சியம் 9 தொகுதிகளும் மற்றும் குறுந்தகடுகளும் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைவா்களாக தி.சு.அவினாசிலிங்கம், சி.சுப்பிரமணியம், வா.செ.குழந்தைசாமி, பொன்ன வைக்கோ ஆகியோர் பணியாற்றியுள்ளனா்.இந்தநிலையில், தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஆட்சிக்குழு மற்றும் பொதுக்குழு கடந்த அக்.,24ல் கூடியது. இந்தக் குழுக்களின் சார்பில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராக ம.ராசேந்திரன் தோ்வு செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் பொறுப்பேற்கவுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி