உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய வீட்டுக்கு வரி விதிக்க ரூ.5,000 லஞ்சம்: நகராட்சி பில் கலெக்டர் கையும் களவுமாக சிக்கினார்

புதிய வீட்டுக்கு வரி விதிக்க ரூ.5,000 லஞ்சம்: நகராட்சி பில் கலெக்டர் கையும் களவுமாக சிக்கினார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநின்றவூர்: ரூ.5,000 லஞ்சம் வாங்கிய நகராட்சி பில் கலெக்டர் சண்முகத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருநின்றவூர், திருவேங்கடம் நகரைச் சேர்ந்தவர் மாயாண்டி, 65; மின்துறையில் செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மருமகள் தமிழ்செல்வி. அதே பகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். அதற்கான வீட்டு வரியை செலுத்த, நகராட்சி அலுவலகத்தில், கடந்த ஜன., 25ல் மனு அளித்துள்ளார்.நகராட்சி பில் கலெக்டர் சண்முகம், 45, முதலில் காலி மனை வரியைச் செலுத்துமாறு கூறியுள்ளார். கடந்த 19ம் தேதி, காலி மனை வரியாக, 18,221 ரூபாய் செலுத்தினார். பின், வீட்டு வரி குறித்து கேட்கும்போது, முறையாக பதிலளிக்காமல் இருந்துள்ளார்.கடந்த 5ம் தேதி, மாயாண்டியை தன் அலுவலகத்திற்கு அழைத்த சண்முகம், வீட்டு வரி போடுவதற்கு, 15,000 ரூபாய் லஞ்சம் வேண்டும்; முன்பணமாக உடனே, 5,000 ரூபாயை தரும்படி வற்புறுத்தியுள்ளார்.இது குறித்து, திருவள்ளூர் மாவட்ட, ஊழல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாயாண்டி நேற்று முன்தினம் புகார் அளித்தார். ஊழல் தடுப்பு பிரிவினர் அறிவுரைப்படி, நேற்று காலை பில் கலெக்டர் சண்முகத்திடம், 5,000 ரூபாயை மாயாண்டி கொடுத்தபோது, ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.ஆறு மாதங்களுக்கு முன்தான், கடலுார் நெல்லிக்குப்பத்தில் இருந்து சண்முகம், சென்னைக்கு பணி மாறுதல் பெற்று வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

தமிழ்வேள்
மார் 08, 2025 14:03

இந்த திருநின்றவூர் கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் நகராட்சி ..அதற்கு முன்புவரை பேரூராட்சியே ..வரி உயர்வு , லஞ்ச லாவண்யத்துக்காகவே நகராட்சியாக்கப்பட்ட சிற்றூர் ..


kulandai kannan
மார் 08, 2025 13:23

இழி பிறவிகள்.


M S RAGHUNATHAN
மார் 08, 2025 12:37

முதலில் இந்த மாதிரி கையும் களவும் ஆக பிடிபடும் அரசு ஊழியர்கள் எந்த வகுப்பை சேர்ந்தவர்கள், அவர்கள் இட ஒதுக்கீடு முறையில் வேலை பெற்றவர்களா என்ற செய்தியும் வெளி இட வேண்டும். பிடிபடுபவரின் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்கள், ரேஷன் கார்டு. ஆகியவற்றை தடை செய்ய வேண்டும். அவரின் குழந்தைகள் பள்ளிகளில் இருந்து நீக்கப் படவேண்டும். குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும்.


rama adhavan
மார் 08, 2025 12:30

வீட்டு வரி நிர்ணயம் செய்வதை ஏன் ஆன்லைன் முறையில் கொண்டு வரக்கூடாது? மிகவும் சுலபமான மென்பொருள் தயாரிப்பு தான் இது. நில தரவுகள், வீட்டு வரி வசூல் ஏற்கனவே ஆன்லைனில் உள்ளனவே.


Raghavan
மார் 08, 2025 11:32

திராவிடி மாடல் செய்ததை இவர்கள் செய்கிறார்கள். அவர் விஞ்ஞான ரீதியாக தப்பிவிட்டார். இவர்கள் தினம் தினம் மாட்டுகிறார்கள். சரியான முறையில் அரசாங்க ஊழியர்களுக்கு பாடம் சொல்லித்தரவில்லைபோல் இருக்கிறது. பேசாமல் ஒரு IAS IPS அதிகாரிகளைக்கொண்டு எல்லா அரசாங்க ஊழியர்களுக்கும் வகுப்பு நடத்தலாம் எப்படி லஞ்சம் வாங்குவது அப்படி வாங்கினாலும் தப்பிப்பது எப்படி என்று. விடியாத ஆட்சியில் இவைகள் எப்போது விடியும்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
மார் 08, 2025 10:53

போலீசார் கைது செய்கிறார்கள் ஆனாலும் லஞ்ச ஊழல்கள் குறைந்த பாடில்லை. தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது. இதற்கு என்ன காரணம்? அரசின் நடவடிக்கைகள் எல்லாமே பெயரளவிற்கு மக்களை ஏமாற்றுவதற்குத்தான் நடக்கிறது. கடும் நடவடிக்கைகள் ஏதும் இல்லை. லஞ்சம் வாங்கினால் தன்னுடைய பணி பறிக்கப்படும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிந்தால் இது எப்படி தொடரும்? நீதிமன்றங்களும் இரட்டை வேடம் போடுகின்றன.


Perumal Pillai
மார் 08, 2025 10:23

ஒரு சாதாரண பில் கலெக்டர் இவ்வளவு வசூல் என்றால் அந்த .... எவ்வளவோ. ஊழல் சாம்ராஜ்யம் இந்த திராவிட மாடல் ஆட்சி .


Nithiyanandam T.A
மார் 08, 2025 10:08

திருந்தாத ஜென்மங்கள், அரசு வேலை இவர்களுக்கு வழங்குவதே தவறு


P VIJAYAKUMAR
மார் 08, 2025 10:05

As per our la govt rules, first property tax to be pay only concerned govt office. Then you may renewal every year through online. First time property tax payers will pay mandatory 5000/- to 10000/- extra for office staff tea expenses. The officers is engaged contract workers for this work collecting money. If you go to second time to govt office for pay property tax, they told go and pay online or e-sewa centers. Example: Urapakkam panchayat office.


Nithiyanandam T.A
மார் 08, 2025 10:05

லஞ்சம் இல்லாத ஊராட்சி ,பேரூராட்சி,மாநகராட்சி,எங்கு சென்றாலும் எந்த ஒரு வீட்டு உரிமையாளர் சென்றாலும் முதலில் லஞ்ச தொகை பேசிய பின் தான் விண்ணப்பமே பெறப்படுகிறது.லஞ்சம் கொடுக்காவிட்டால் இழுத்தடிப்பு படலம் தொடடர்கிறது.எத்தனை லஞ்ச புகாரில் காட்டினாலும் திருந்துவதும் இல்லை,அவர்களை வேலையைவிட்டு மட்டும் அல்லாமல் அவர்களுக்கு பிற்கால சலுகைகளையும் அளிக்காமல் தடுக்க வேண்டும்,அந்தந்த அலுவலகத்தில் தலைமை பொறுப்பாளர்கள் முன்னிலையிலும் ,மற்ற சக ஊழியர்கள் முன்னிலையிலும் லஞ்சம் வாங்குபவர்களை வெட்கி தலைகுனியும் படியும் செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு பிற்க்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை