உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.11.70 லட்சம் லஞ்சப்பணத்துடன் சிக்கிய ஜஹாங்கீர் பாஷா சஸ்பெண்ட்!

ரூ.11.70 லட்சம் லஞ்சப்பணத்துடன் சிக்கிய ஜஹாங்கீர் பாஷா சஸ்பெண்ட்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஊட்டி நகராட்சி கமிஷனராக இருந்த போது லஞ்சப்பணத்துடன் சிக்கிய ஜஹாங்கீர் பாஷாவை சஸ்பெண்ட் செய்து நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி கமிஷனராக இருந்தவர் ஜஹாங்கீர் பாஷா. இவர் சட்ட விரோத செயல்பாடுகளுக்கு பணம் வாங்கி, அனுமதி வழங்குவதாக, குற்றச்சாட்டு எழுந்தது.ஊட்டி - கோத்தகிரி சாலையில், தொட்டபெட்டா சந்திப்பில், லஞ்ச ஒழிப்பு போலீசார், ஜஹாங்கீர் பாஷாவின் காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த, கணக்கில் வராத பணம், 11.70 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் நகராட்சி கமிஷனர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். ஒரு சில வாரங்களில் அவர் திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. லஞ்சம் வாங்கிய அதிகாரியை சஸ்பெண்ட் செய்யாமல் புதிய பணியிடம் ஒதுக்கியது ஏன் என சராமரியாக கேள்வி எழுப்ப துவங்கினர். நெட்டிசன்களும் சமூக வலைதளங்களில் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்ப துவங்கினர்.இந்நிலையில் ஜஹாங்கீர் பாஷாவை முன்தேதியிட்டு(நவ.,29) சஸ்பெண்ட் செய்து நகராட்சி நிர்வாக ஆணையர் இன்று உத்தரவு பிறப்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Bhaskaran
டிச 08, 2024 17:17

இன்றைக்கு பழைய மலையாள திரைப்படம் ஆகஸ்ட் 1 பார்த்தேன் அதில் கேர்ள் முதல்வரை தீர்த்துக்கட்ட திட்டம் போடும் கிரிமினலுக்கு தமிழ் நாடு போலீஸ் உயர் அதிகாரி உடந்தையாக இருப்பதுபோல் காட்சி


Subash BV
டிச 08, 2024 14:23

Muslim OWAISI the mp is telling theres no job opportunities for muslims in India. IF WE GIVE TOP POST, THESE GUYS ARE LOOTING. JUSTIFY YOURSELF.


RAMESH
டிச 08, 2024 10:33

மர்ம நபர்களுக்கு திமுக அரசு முட்டு கொடுக்கும்


Kasimani Baskaran
டிச 08, 2024 08:15

அரசாங்க வேலைக்கு ஆளெடுப்பதில் வசூல் வேட்டையில் ஈடுபட்டு மோசடி செய்து, புகார் என்று வந்தவுடன் பணத்தை திரும்ப கொடுத்து புனிதமானவர் மந்திரி சபையில் அங்கம் வகிக்கிறார். பிறகு எப்படி வெளங்கும்


Karikalan Thangarasu
டிச 08, 2024 09:53

தமிழ்நாடு லஞ்சம் வாங்குவதில் நம்பர் 1 மாநிலமாக உள்ளது


Kasimani Baskaran
டிச 08, 2024 10:22

இது பற்றி ரூ200-300 க்கு ஆத்மாவை விற்ற பாமர உடப்பிறப்புக்கள் கூட பேசவே மாட்டார்கள். அவர்களின் நினைவெல்லாம் வடை, பக்கோடாவை சுற்றிச்சுற்றியே இருக்கும்.


நிக்கோல்தாம்சன்
டிச 08, 2024 07:31

கஸ்துரி மேடம் கைது செய்யப்பட்ட விதமும், நம்ம ஜஹாங்கிர் போன்ற லஞ்ச திருடர்கள் கிட்ட செல்லுபடியாகாது


Murthy
டிச 08, 2024 02:41

கோமாளித்தனமான ஆட்சி நிர்வாகம்.....


Bala
டிச 07, 2024 22:42

அதெல்லாம் அல் உம்மா பார்த்துக்கும். சிறுபான்மையினரை இழிவு செய்யும் சிறுமயை கொளுத்தும் இந்த திராவிட மாடல்.


Ramesh Sargam
டிச 07, 2024 22:36

காதில் பூ சொருகிட்டாங்க மீண்டும்.


Perumal Pillai
டிச 07, 2024 22:21

ஊழல் செய்பவர்களின் பொற்காலம் இந்த ஆட்சி. வெட்கம் மானம் ரோஷம் இல்லாமல் பணம் சம்பாதிக்கின்றனர். சிறிதும் குற்ற உணர்ச்சி இல்லாத விலங்குகளை போன்றவர்கள் . மங்குனி xxxxxx எவ்வழியோ ஊழியர்கள் அவ்வழி .


A P
டிச 07, 2024 21:41

இது போன்ற வாலாட்டுகிற நன்றியுள்ள இரண்டு கால் பிராணிகளை உடனேயே டிஸ்மிஸ் செய்ய வேண்டாமா. அப்படி செய்தால் , மேலிடத்துக்கு வந்து கொண்டிருக்கிற குறிப்பிட்ட சதவீதம் வராமல் போய்விடும் என்கிற சந்தேகமா அல்லது இவர் அவர்கள் இனத்தை சேர்ந்தவர் என்பதாலா தெரியவில்லையே.


புதிய வீடியோ