உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு சம்பளத்தில் கட்சி பேனர் வைக்கும் பேரூராட்சி ஊழியர்கள்: மக்கள் அதிருப்தி

அரசு சம்பளத்தில் கட்சி பேனர் வைக்கும் பேரூராட்சி ஊழியர்கள்: மக்கள் அதிருப்தி

கோவை: முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை, தாளியூர் பேரூராட்சி ஊழியர்கள் தி.மு.க., பேனர் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.முதல்வர் ஸ்டாலினின் நாளை 72 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையடுத தமிழகம் முழுதும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பேனர்களை வைத்து வருகின்றனர்.கோவை, தாளியூர் பேரூராட்சி பகுதியில் தி.மு.க.,வினர் பேனர் தயார் செய்துள்ளனர். ஆனால் அதனை, பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்கள் வைத்து வருகின்றனர். இதற்கு பேரூராட்சி செயல் அலுவலரும் உத்தரவிட்டு உள்ளது தெரியவந்துள்ளது. பேனர் வைப்பதால், தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள பொது மக்கள், சம்பந்தப்பட்ட செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

மால
பிப் 28, 2025 13:19

ஒன்னும் நடக்காது அமைதியா வேடிக்கை பாக்கவும்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
பிப் 28, 2025 14:29

உண்மை....அவர்களுக்கான ஏதாவது நடந்தால் மட்டுமே திரும்பி பார்ப்பார்கள்....பெண்ளுக்கு கிடைக்கும் ஆயிரம் ருபாய், இலவச பஸ், மற்றும் வரப்போகும் தேர்தலுக்கு கொடுக்கும் இலவசங்கள், ஆண்களுக்கு தடையில்லா சரக்கு, 200 ருபாய், பிரியாணி இளைஞர்களுக்கு போதை பொருட்கள், செய்யும் அடாவடி அநியாயங்களை தட்டி கேட்காத போலிஸ்.....இப்படி அவரவர் தேவைகள் தங்கு தடையின்றி கிடைத்தால் அந்த காமராஜரே வந்தாலும் டெபாசிட் கிடைப்பது கஷ்டமே.... எதைப்பற்றியும், எதிர்காலத்தையும் பற்றியும் சிந்திக்காமல் கொஞ்சமும் சுரணையே இல்லாமல் வாழும் தமிழக மக்கள்....!!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை